தொழில்நுட்பம்

4K வீடியோ, ஏ.ஐ ஃபோகஸ்: டிராவல், விலாக்கிங்-க்கு அதிரடி அம்சங்களுடன் 5 மிரர்லெஸ் கேமராக்கள்!

Published

on

4K வீடியோ, ஏ.ஐ ஃபோகஸ்: டிராவல், விலாக்கிங்-க்கு அதிரடி அம்சங்களுடன் 5 மிரர்லெஸ் கேமராக்கள்!

பயணம் செய்யும்போதும், அற்புதமான தருணங்களைப் படமெடுக்கும்போதும், தொழில்முறை அம்சங்கள் கொண்ட சிறிய கேமராவைக் கண்டுபிடிப்பது கடினமான காரியம். ஆனால், இன்றைய சந்தையில் உள்ள மிரர்லெஸ் கேமராக்கள், கனமில்லாமல் சிறந்த திறன்களை வழங்குகின்றன. புகழ்பெற்ற கேமரா பிராண்டுகளான Fujifilm முதல் சோனி வரை, பயணங்கள் மற்றும் வீடியோ பதிவுகளுக்காக சிறந்த 5 சிறிய கேமராக்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.Canon EOS R50 Vபயணம் செய்பவர்கள் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு Canon EOS R50 V சிறந்த தேர்வாகும். சிறிய அளவில் இருந்தாலும், பல சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. இது வினாடிக்கு 60 ஃபிரேம்களில் 4K வீடியோ எடுக்கும் திறன் கொண்டது. மேலும், Canon Log 3 பிரொஃபைல் மூலம், கலர் கிரேடிங் செய்யும்போது சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கஇதன் 24.2mp சென்சார் மற்றும் Dual Pixel ஆட்டோஃபோகஸ் அமைப்பு இணைந்து, துல்லியமான புகைப்படங்களை எடுக்க உதவுகின்றன. இது மனிதர்களின் கண்கள், முகம் அல்லது அசைந்து கொண்டிருக்கும் விலங்குகளைக்கூட வேகமாக டிராக் செய்ய முடியும். ஒரு வினாடிக்கு 15 புகைப்படங்கள் எடுக்கும் வேகம் இதன் மற்றொரு சிறப்பம்சம். இதன் விலை ரூ. 79,995 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.Sony ZV-E10 IIசோனி நிறுவனம் vloggers மற்றும் ஆன்லைன் கிரியேட்டர்களுக்காக ZV-E10 II மாடலை வடிவமைத்துள்ளது. இது வினாடிக்கு 60 ஃபிரேம்களில் 4K வீடியோ மற்றும் 10-பிட் வண்ணத்தில் படங்களை எடுக்கிறது. Sony-இன் S-Log3 பிரொஃபைல், வெளிச்சமான மற்றும் இருண்ட பகுதிகளில் உள்ள விவரங்களையும் துல்லியமாகப் படமெடுக்க உதவுகிறது. இது ‘Product Showcase’ மற்றும் ‘பின்னணியை மங்கலாக்கும் (background blur)’ பட்டன் போன்ற விளாகர்களுக்கு பயனுள்ள அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் 24.2mp சென்சார், துல்லியமான மற்றும் உயர்தரமான படங்களை எடுக்க உதவுகிறது. விலையை பொறுத்தவரை, அமேசானில் ரூ. 84,489-க்கு கிடைக்கிறது.Olympus OM-D E-M10பயணம் செய்யும்போது குறைவான எடையுடன், சிறந்த படத் தரத்தை விரும்பும் புகைப்படக் கலைஞர்களுக்கு Olympus OM-D E-M10 நல்ல தேர்வாகும். இதன் கிளாசிக் தோற்றம், நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்துள்ளது. இதில் 20.3mp Micro Four Thirds சென்சார் மற்றும் 5-axis in-body image stabilisation அம்சம் உள்ளது. இந்த அம்சம், கேமராவின் ஷேக் தடுத்து, குறைந்த வெளிச்சத்திலும் துல்லியமான படங்களையும், துல்லிய வீடியோக்களையும் எடுக்க உதவுகிறது. இதன் திரை, செல்ஃபி எடுப்பதற்கும், வீடியோ பதிவு செய்வதற்கும் வசதியாக மடங்குகிறது. புகைப் படக்கலைக்கு இந்த கேமரா மிகவும் பொருத்தமானது. இதன் விலை ரூ. 94,490-ல் தொடங்குகிறது.Nikon Z30Nikon Z30 சிறிய மற்றும் எடை குறைந்த கேமராவாகும். இது 20.92mp சென்சார் கொண்டு 4K வீடியோக்களை துல்லியமாக பதிவு செய்கிறது. இதில் உள்ள ‘Flat’ பிக்சர் பிரொஃபைல், வீடியோவில் கலர் கிரேடிங் செய்ய விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். இதன் ஹைப்ரிட் ஆட்டோபோகஸ் அமைப்பு, மனிதர்களின் கண்கள் மற்றும் விலங்குகளையும் துல்லியமாக கண்டறிந்து ஃபோகஸ் செய்கிறது. இந்த கேமராவில் வியூஃபைண்டர் இல்லை. அதற்கு பதிலாக, எளிதில் சுழலக்கூடிய டச் ஸ்கிரீன் உள்ளது. வீடியோ பதிவு செய்யும்போது சிவப்பு நிற ஒளி எரிவதால், பதிவு செய்கிறோமா இல்லையா என்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாம். இதன் விலை ரூ. 83,499-ல் இருந்து தொடங்குகிறது.Fujifilm X-M5தொழில்முறை வீடியோக்களை எடுப்பவர்களுக்கு Fujifilm X-M5 நல்ல தேர்வாகும். இது 26.1 mp சென்சார் கொண்டு 6.2K ரெசல்யூஷல் வீடியோக்கள் பதிவு செய்கிறது. இதில் உள்ள F-Log மற்றும் F-Log 2 பிரொஃபைல்கள், கலர் கிரேடிங்கிற்கு சிறந்தது. இதில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ஆட்டோஃபோகஸ் அமைப்பு, மனிதர்கள், விலங்குகள் மற்றும் ட்ரோன் போன்றவற்றை கூட கண்டறியும் திறன் கொண்டது. இந்த கேமராவில் 3 மைக்ரோஃபோன்கள் உள்ளன. இதில் ‘Vlog’ மோட், ‘Product Priority’ ஃபோகஸ் மற்றும் பின்புறத்தை மங்கலாக்கும் வசதி போன்ற அம்சங்களும் உள்ளன. மேலும், சமூக வலைதளங்களுக்கான போர்ட்ரேட் வீடியோக்களை எடுக்கவும் ஒரு மோட் உள்ளது. இதன் விலை ரூ. 87,999 ஆக உள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version