வணிகம்
ஐ.டி.ஆர் தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பு: அபராதம் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
ஐ.டி.ஆர் தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பு: அபராதம் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான (ITR) காலக்கெடு ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு, செப்டம்பர் 16 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டு 2024-25 மற்றும் மதிப்பீட்டு ஆண்டு 2025-26-க்கான இந்த நீட்டிப்பு, வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் சர்வர் சிக்கல்கள் காரணமாக எடுக்கப்பட்டுள்ளது.இருமுறை மாற்றப்பட்ட காலக்கெடு தணிக்கைக்கு உட்படாத தனிநபர் வரி செலுத்துவோருக்கான அசல் காலக்கெடு ஜூலை 31, 2025 ஆக இருந்தது. போர்ட்டலில் ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து, மே மாதத்தில் இந்தக் காலக்கெடு செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது, மீண்டும் பரவலாகப் புகார்கள் எழுந்ததால், வருமான வரித் துறை மேலும் ஒரு நாள் நீட்டித்து, செப்டம்பர் 16-ஐ இறுதித் தேதியாக அறிவித்துள்ளது.தாக்கல் செய்வதற்கான வழிமுறைகள், அபராதங்கள்வருமான வரி தாக்கல் செய்ய, பயனர்கள் வருமான வரி போர்ட்டலில் உள்நுழைந்து, சரியான படிவத்தைத் தேர்ந்தெடுத்து, விவரங்களைப் பூர்த்தி செய்து, வரி செலுத்தி, சமர்ப்பித்த பிறகு இ-வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும்.தேவையான ஆவணங்கள்:படிவம் 16 (Form 16)படிவம் 26AS (Form 26AS)வருடாந்திர தகவல் அறிக்கை (AIS)பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு (பான் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்)முதலீட்டு ஆவணங்கள்வீட்டுக் கடன் அல்லது காப்பீட்டு பிரீமியம் ரசீதுகள்அபராதம்:காலக்கெடுவைத் தாண்டி கணக்கு தாக்கல் செய்தால், பிரிவு 234A-இன் கீழ் மாதத்திற்கு 1% வட்டி விதிக்கப்படும். ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ₹5,000 அபராதமும், அதற்கு குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.1,000 அபராதமும் விதிக்கப்படும். மேலும், காலக்கெடுவுக்குப் பிறகு தாக்கல் செய்தால், வரி செலுத்துபவர்கள் சில நன்மைகளையும், நஷ்டங்களை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பையும் இழக்க நேரிடும்.