இந்தியா

கேரள இளம் தம்பதியின் ‘விபரீதப் பழிவாங்கும் திட்டம்’: நட்புடன் விருந்துக்கு அழைத்து கொடூர சித்திரவதை

Published

on

கேரள இளம் தம்பதியின் ‘விபரீதப் பழிவாங்கும் திட்டம்’: நட்புடன் விருந்துக்கு அழைத்து கொடூர சித்திரவதை

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், மனைவி சிலகாலம் பழகிவந்த 2 இளைஞர்களை வீட்டிற்கு அழைத்து, சித்திரவதை செய்து கொள்ளையடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.ஆங்கிலத்தில் படிக்க:இது தொடர்பாக, பத்தனம்திட்டா காவல்துறையில் கடந்த வாரம் 29 வயது இளைஞர் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதில், தனது காதலியின் குடும்பத்தால் தான் தாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். எனினும், அவரது வாக்குமூலத்தில் சில முரண்பாடுகள் இருந்ததால், காவல்துறை இது குறித்து மேலும் விசாரித்தது. அப்போது இந்தத் தாக்குதலுக்குக் குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினரே காரணம் என்பது தெரியவந்தது. அந்த இளைஞரைச் சித்திரவதை செய்த பின்னர், தனது காதலியின் குடும்பத்தால் தாக்கப்பட்டதாகப் பொய் சொல்லும்படி தம்பதியினர் மிரட்டியதாகவும் காவல்துறை தெரிவித்தது.கடந்த வெள்ளிக்கிழமை, கோயிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மலையில் வீட்டில் ஜெயேஷ் (30) மற்றும் அவரது மனைவி ரேஷ்மி (25) ஆகியோரை ஆரன்முளா பகுதி காவல்துறை கைது செய்தது. 29 வயது இளைஞர் மட்டுமல்லாமல், 19 வயது இளைஞர் ஒருவரும் இதேபோல் இந்தத் தம்பதியினரால் தாக்கப்பட்டதாக காவல்துறை கண்டறிந்துள்ளது.காவல்துறையினர் கூறியபடி, பாதிக்கப்பட்ட இரு ஆண்களும் ஜெயேஷுடன் பெங்களூரில் பணிபுரிந்தவர்கள் மற்றும் இந்தத் தம்பதியின் நண்பர்கள். ரேஷ்மி இந்த இரு ஆண்களுடன் உறவு வைத்திருந்ததாகவும், இதைக் கண்டறிந்த ஜெயேஷ், வாட்ஸ்அப்பில் மனைவியின் உரையாடல்களைப் பார்த்ததாகவும் காவல்துறை தெரிவித்தது. கோபமடைந்த அவர், அந்த இரு ஆண்களிடமிருந்தும் பழிவாங்கும் திட்டத்தைத் தீட்டி, அதில் தன் மனைவியையும் சேர்த்துள்ளார். கணவருடன் சமரசம் செய்வதன் ஒரு பகுதியாக, ரேஷ்மி இந்தத் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.“தம்பதியினர் அந்த இளைஞர்களைக் கொள்ளையடித்துள்ளனர். இதில் ஒருவர் 20,000 ரூபாயை இழந்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களைச் சித்திரவதை செய்யும்போது, ​​தம்பதியினர் விபரீதமான முறையில் நடந்துகொண்டனர். தம்பதியினர் தங்களுக்கு மாந்திரீகம் செய்வதாக பாதிக்கப்பட்டவர்கள் அஞ்சியுள்ளனர். எனினும், விரிவான விசாரணையின் பின்னரே தம்பதியின் உண்மையான நோக்கத்தைக் கண்டறிய முடியும்” என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பத்தனம்திட்டா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர். ஆனந்த், இந்த இரு தாக்குதல் வழக்குகளையும் விசாரிக்க ஒரு சிறப்புப் தனிப்படைக் குழு அமைக்கப்படும் என்று கூறினார். “இரண்டு வழக்குகளும் ஆரம்பக் கட்டத்தில் உள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதேபோல் வேறு குற்றங்களையும் செய்துள்ளனரா என்பதை நாம் ஆராய வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறைக்கு ஒத்துழைக்காததால், விரிவான அறிவியல் பூர்வமான விசாரணை தேவைப்படுகிறது” என்றார்.ஓணம் விருந்துகாவல்துறையிடம் அளித்த வாக்குமூலங்களின்படி, பத்தனம்திட்டாவின் ரான்னி பகுதியைச் சேர்ந்தவரான 29 வயது இளைஞர், “ஓணம் பண்டிகை அன்று (செப்டம்பர் 5) வீட்டிற்கு வந்து கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும்படி ஜெயேஷ் என்னை அழைத்தார். நான் அவரது வீட்டிற்குச் சென்றதும், எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல், மிளகு ஸ்ப்ரே அடித்து என்னை தாக்கினார். என் கைகள் இரண்டும் கட்டப்பட்டு, மேலே இருந்த மரக்கட்டையில் தொங்கவிடப்பட்டேன். ரேஷ்மி இரும்புத் தடிகள் உட்படப் பல பொருட்களால் என்னைக் கடுமையாகத் தாக்கினார்” என்றார்.“ரேஷ்மி என்னைச் சித்திரவதை செய்தபோது, ​​ஜெயேஷ் அதைத் தனது செல்போனில் பதிவு செய்தார். என் பிறப்புறுப்பு பலமுறை ஸ்டேப்லர் செய்யப்பட்டிருந்தது. அன்று இரவு 8 மணியளவில், தம்பதியினர் என்னை ஜெயேஷின் ஸ்கூட்டரில் ஏற்றி, புத்துமோன் என்ற இடத்தில் இறக்கிவிட்டனர். நான் கடுமையாகத் தாக்கப்பட்டதால், ஸ்கூட்டரில் ஜெயேஷ் மற்றும் ரேஷ்மி இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்தேன். இறக்கிவிடுவதற்கு முன், நான் காதலித்த பெண்ணின் குடும்பத்தால் தாக்கப்பட்டதாகப் பிறரிடம் கூறும்படி மிரட்டினர்” என்று அவர் கூறினார்.படுகாயமடைந்த இளைஞரைக் கண்ட உள்ளூர் மக்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தம்பதியினர் கூறியபடி, தனது காதலியின் குடும்பத்தினரால் தாக்கப்பட்டதாக அவர் முதலில் காவல்துறையிடம் தெரிவித்தார். “சித்திரவதை குறித்து எதையும் வெளிப்படுத்தினால், கொலை செய்துவிடுவதாக அந்தத் தம்பதி மிரட்டியிருந்தது. அதனால், அவர் தவறான தகவலைக் கொடுத்தார். பின்னர், அந்தத் தம்பதியினரால் நடந்த கொடூரமான செயல்களைப் பற்றி விவரித்தார்” என்று ஓர் அதிகாரி கூறினார்.செப்டம்பர் 12-ம் தேதி அந்த தம்பதியர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.மேலும் ஒருவர் பாதிப்புதம்பதியினரிடம் விசாரணை நடத்தியபோது, ​​செப்டம்பர் 1-ம் தேதி மற்றொருவரையும் இதேபோல் சித்திரவதை செய்திருப்பது காவல்துறைக்குத் தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், ஆலப்புழாவைச் சேர்ந்த 19 வயது இளைஞரான மற்றொருவரை காவல்துறை கண்டுபிடித்தது. அவரும் இந்தச் சம்பவத்தைப் பற்றி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.காவல்துறையிடம் அவர் கூறுகையில், “தம்பதியினரின் வீட்டிற்கு அழைக்கப்பட்ட நான், செப்டம்பர் 1-ம் தேதி மராமன் பகுதியில் இருந்து ஜெயேஷின் இருசக்கர வாகனத்தில் சென்றேன். வீட்டில் சித்திரவதை செய்யப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டேன். ஜெயேஷ் தனது செல்போன் கேமராவை ஆன் செய்து, ரேஷ்மியுடன் உடலுறவு கொள்வது போல் நடிக்கச் சொன்னார். நான் மறுத்தபோது, ​​தாக்கப்பட்டேன். என் இரண்டு கைகளும் சால்வையால் கட்டப்பட்டு, அந்தச் சால்வையால் வீட்டின் கூரையில் உள்ள மரத்தடியிலிருந்து தொங்கவிடப்பட்டேன்” என்று கூறினார். அதன் பின்னர், உடல் முழுவதும் தாக்கப்பட்டதாகவும், கைகளில் ‘கட்டிங் பிளேயர்’ கருவியால் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.தம்பதியினர் அவரது பணப்பையிலிருந்து 20,000 ரூபாயை எடுத்ததாகவும், அதில் 1,000 ரூபாயை அவரது பயணச் செலவுக்காகக் கொடுத்ததாகவும் அவர் காவல்துறையிடம் தெரிவித்தார். அதன் பிறகு அருகில் உள்ள ஆட்டோ ரிக்‌ஷா நிலையத்தில் தன்னை இறக்கிவிட்டதாகவும், பிறகு கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் கூறினார்.‘தனிமையான வாழ்க்கை’கோயிபுரத்தில், தம்பதியினரின் அண்டை வீட்டுக்காரர் ஒருவர் கூறுகையில், “ஜெயேஷ் குடும்பத்தினர் கிராமத்தில் ஒரு தனிமையான இடத்தில், ‘தனித்து வாழ்கின்றனர்’. அவர்கள் மற்றவர்களுடன் அரிதாகவே பழகினர். ஜெயேஷ் புல்டோசர் இயக்குநராக வேலை செய்து வந்தார், அவரது மனைவி கேட்டரிங் நிறுவனத்தில் வேலை செய்தார். ஆனால், அந்தப் பெண் எப்போதும் நிதி நெருக்கடி குறித்து புகார் கூறுவார்” என்றார்.ஜெயேஷ் பல ஆண்டுகளுக்கு முன்பு போக்சோ வழக்கை எதிர்கொண்டு சிறையில் இருந்துள்ளார். பின்னர், ரேஷ்மியைத் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்று அண்டை வீட்டுக்காரர் கூறினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version