தொழில்நுட்பம்
கேலக்ஸி பயனர்களுக்கு குட்நியூஸ்: எக்கச்சக்க அம்சங்களுடன் சாம்சங் One UI 8 மல்டிமோடல் ஏ.ஐ வெளியீடு!
கேலக்ஸி பயனர்களுக்கு குட்நியூஸ்: எக்கச்சக்க அம்சங்களுடன் சாம்சங் One UI 8 மல்டிமோடல் ஏ.ஐ வெளியீடு!
சாம்சங் அதன் பயனர்களின் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல, ஒன் யுஐ 8 என்ற புதிய ஏ.ஐ. இயங்குதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் தளம், கேலக்ஸி எஸ் 25 சீரிஸ் ஃபோன்களில் இருந்து கிடைக்கவுள்ளது. இதன் பின்னர், இந்த ஆண்டு இறுதியில் கேலக்ஸி எஸ்24, கேலக்ஸி இசட் போல்ட் 6, கேலக்ஸி இசட் பிளிப் 6 போன்ற ஃபோன்களிலும் இது பயன்படுத்தப்படும். இந்த புதிய ஒன் யுஐ 8 ஓ.எஸ். பயனர்களின் அன்றாட வேலைகளை எளிமையாக்கவும், தேவைகளைப் பூர்த்தி செய்யவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள முக்கிய அம்சங்கள், தொழில்நுட்பம் என்பதைத் தாண்டி, பயனர்களுக்கு தனிப்பட்ட உதவியாளர்போல் செயல்படும்.One UI 8 இன் அசத்தலான அம்சங்கள்Now Bar & Now Brief: இந்த அம்சங்கள், உங்கள் அன்றாட நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு, பயணத் தகவல்கள், ரிமைண்டர் போன்றவற்றை வழங்கி, உங்கள் நாளைத் திட்டமிட உதவுகின்றன.Circle to Search: கேம் விளையாடும்போது, திரையில் உள்ள ஏதேனும் ஒரு கேரக்டர் வட்டமிட்டால், அதுபற்றிய தகவல்கள் உடனே திரையில் தோன்றும். இது விளையாட்டின் நுணுக்கங்களை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும்.Audio Eraser: வீடியோ அல்லது ஆடியோ பைல்களில் உள்ள தேவையற்ற பின்னணி இரைச்சலை, ஒரே கிளிக்கில் நீக்கிவிடும். இதனால், உங்கள் வீடியோக்கள் மேலும் தெளிவானதாக இருக்கும்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கPortrait Studio: இந்த ஏ.ஐ தொழில்நுட்பம், உங்கள் செல்லப்பிராணிகளின் படங்களை, துடிப்பான,கலைநயம் மிக்க ஸ்டுடியோ போர்ட்ரெய்ட் போல மாற்றிவிடும்.Call Captions: கால் அழைப்பின்போது பேசப்படும் குரலை, உடனடியாக எழுத்துகளாக மாற்றித் தரும். இரைச்சல் மிகுந்த இடங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.Gemini Live: பிளிப் ஃபோன்களின் வெளிப்புற திரையில் (FlexWindow), வாய்ஸ் உதவியாளராகச் செயல்படுகிறது. இது கைகளை பயன்படுத்தாமலே தகவல்களைத் தேட உதவும்.Knox Security: KEEP மற்றும் Knox Matrix போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், உங்கள் தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது.ஒன் யுஐ 8 என்பது, ஏ.ஐயை அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கச் செய்வதற்கான முக்கியமான படியாகும். இது பயனர் நட்பு இடைமுகத்தையும், பலவிதமான ஏ.ஐ. திறன்களையும், கூடுதல் பாதுகாப்பையும் வழங்குகிறது.