இந்தியா

ம.பி பன்னா புலிகள் சரணாலய பகுதியில் ஓட்டல்: ஐ.ஆர்.எஸ் அதிகாரி, மனைவியிடம் விளக்கம் கேட்பு!

Published

on

ம.பி பன்னா புலிகள் சரணாலய பகுதியில் ஓட்டல்: ஐ.ஆர்.எஸ் அதிகாரி, மனைவியிடம் விளக்கம் கேட்பு!

மத்திய பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் சரணாலயத்தின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்குள் ஓட்டல் கட்டியதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக வருவாய் சேவை (ஐ.ஆர்.எஸ்) அதிகாரியிடமும், உச்ச நீதிமன்ற ஊழியரான அவரது மனைவிவியிடமும் வனத்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது.பன்னா கள இயக்குநர் நரேஷ் குமார் யாதவ், சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்யப்பட்டது குறித்து போபாலில் உள்ள தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனப்படைத் தலைவருக்கு செப்டம்பர் 9-ஆம் தேதி அறிக்கை சம்பித்துள்ளார். அதில், ஓட்டல் கட்டியதாக கூறப்படும் இடத்தில் ஆய்வு  செய்தபோது சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் வருவாய் சேவை (ஐ.ஆர்.எஸ்) அதிகாரி பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் உச்ச நீதிமன்ற ஊழியரான அவரது மனைவி ஹிமானி சரத் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர்களிடம் பேசிய ஹிமானி சரத், “நான் டெல்லியில் உள்ள எனது வீட்டை விற்றுவிட்டேன். எங்களுக்கு வேறு வீடு இல்லை. இது எனது ஓய்விற்கு பிந்தைய விடாகும். நாங்கள் இல்லாத நேரத்தில் ஆய்வுக் குழு எங்கள் ஊழியர்களை மிரட்டியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையில் புகாரளித்துள்ளோம். நாங்கள் துன்புறுத்தலை எதிர்கொள்கிறோம்” என்று குற்றம்சாட்டியுள்ளனர்.வனவிலங்கு ஆர்வலர் அஜய் துபே என்பவர் அளித்த புகாரின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த  குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள ஹிமானி சரத், “தங்கள் இல்லத்தில் எந்த வணிக நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை” என்று கூறியுள்ளார். மேலும், பஞ்சாயத்து வரி மற்றும் விவசாய நிலத்திலிருந்து குடியிருப்பு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டதற்கான அனைத்து ஆவணங்களையும்  அதிகாரிகளிடம் சம்பித்த பிறகு தான் இந்த கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தில் ஓட்டல் போன்றவற்றை கட்ட விரும்பினால் உரிய அனுமதிகளுக்கு பிறகு தான் கட்டுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.சம்பந்தப்பட்ட இடத்தில் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து சரத் பேசியதாவது, “எங்களிடம் ஒரு மரம் அறுக்கும் இயந்திரம் இருந்தது. அது ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. அதை நாங்கள் விற்பனைக்கு வைத்துள்ளோம். இருந்தும் அந்த இயந்திரத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. ஆய்வு குழு இந்த இடத்தில் முழு சோதனை மேற்கொண்ட நிலையில் எங்கள் வீடு கட்டுவதில் எந்த மரமும் பயன்படுத்தப்படவில்லை என்பதை தெரிந்து கொண்டது. நாங்கள்  இயற்கை விவசாயத்தை மட்டுமே செய்து வருகிறோம். கள இயக்குநரிடம் இதுகுறித்த தகவலை தெரிவித்துள்ளோம், அவர்கள் சட்டத்தின்படி செயல்படுவார்கள் என்று முழு நம்பிக்கை உள்ளது,” என்றார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்க

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version