உலகம்

வெனிசுலா படகு மீது மீண்டும் தாக்குதல் நடத்திய அமெரிக்கா

Published

on

வெனிசுலா படகு மீது மீண்டும் தாக்குதல் நடத்திய அமெரிக்கா

தென் அமெரிக்க நாடான வெனிசுலா, போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவுக்குள் போதைப்பொருட்களை வினியோகிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

இதற்கிடையே கடந்த 3ந்தேதி வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருட்கள் கடத்த முயன்ற கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

இந்த நிலையில் வெனிசுலா படகு மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, வெனிசுலாவைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பல் சர்வதேச கடல் பகுதியில் போதைப்பொருட்களை படகில் கொண்டு சென்று கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்த தாக்குதல் அவசியம்.

“நீங்கள் அமெரிக்கர்களை கொல்லக்கூடிய போதைப்பொருட்களை வினியோகம் செய்வதால், நாங்கள் உங்களை வேட்டையாடுகிறோம்” என்றார். அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் வெனிசுலா நாட்டுக் கப்பல் பற்றி எரியும் 28 வினாடிகள் கொண்ட வீடியோக் காட்சியை டிரம்ப் வெளியிட்டுள்ளார். இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version