டி.வி

அடுத்தடுத்து பல உண்மைகளை உடைத்த முத்து; க்ரிஷுக்கு ரெடியான டெஸ்ட்

Published

on

அடுத்தடுத்து பல உண்மைகளை உடைத்த முத்து; க்ரிஷுக்கு ரெடியான டெஸ்ட்

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  முத்து தான்  மாஸ்டரை அடிக்கவில்லை என  விஜயாவிடம் சொல்லுகின்றார். ஆனால் விஜயா இவன் முரடன், அப்படி பண்ணி இருப்பான்  என்று  எல்லோரிடமும் சொல்லுகின்றார். இதனால் அவரை சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பதற்கு  நடவடிக்கை எடுக்கின்றார்கள். வீட்டிலும் பாட்டியும் அண்ணாமலையும் முத்து அப்படி செய்திருக்க மாட்டான் என்று சொல்ல,  அவனை அடிச்சு வளர்த்து இருக்கணும்.  இப்ப ரவுடியா நிக்கிறான் என்று விஜயா சொல்லுகின்றார்.  எனினும் முத்து மனோஜ் தான் இதை செய்தான் என்று சொல்லவில்லை.  அதன் பின்பு  சீர்திருத்தப் பள்ளியில் இருந்து முத்துவை அழைத்து  செல்கின்றார்கள். ஆனால் விஜயா  எதுவும் சொல்லாமல் நிற்கின்றார்.இதையெல்லாம் கேட்ட மீனா  அழுது புலம்பி  உங்கள ஒரு நாள் நிச்சயம் உங்க அம்மா புரிந்து கொள்ளுவார் என்று சொல்லுகின்றார்.  மேலும்  இதனால் தனக்கு படிப்பும்  தொடர முடியல, அந்த வலியை மறைக்க குடிச்சேன் என்றும் முத்து சொல்லுகின்றார்.  அத்துடன் நீ எனது வாழ்க்கையில் வந்த பிறகு தான்  எல்லாமே மாறிடுச்சு என்று சொல்லுகின்றார்.இதை தொடர்ந்து க்ரிஷுக்கு டெஸ்ட் வைக்க  வருகின்றார்கள். இதன்போது எப்படி க்ரிஷ் நல்லவன் என்று கண்டுபிடிப்பீங்க என்று மாஸ்டர் கேட்க, ஒரு பக்கம் ஆப்பிளும் ஒரு பக்கம் பணமும் வைப்போம்.. அதில் அவன் ஆப்பிளை எடுத்தால்  அவன் அப்பாவி.  அப்படியே பணமும் எடுத்தாலும் அந்த பணம் எடுத்ததற்கான காரணத்தை கேட்போம்.  அதிலேயே தெரிந்து விடும் என்று சொல்லுகின்றார்கள்.  இதுதான் இன்றைய எபிசோட். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version