உலகம்

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இத்தாலி பிரதமர் மெலோனி

Published

on

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இத்தாலி பிரதமர் மெலோனி

பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அக்கட்சி சார்பில் வெவ்வேறு வகையான சேவை பணிகள் இன்று தொடங்கி வைக்கப்படுகின்றன. 

அவருக்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இன்று தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். 

இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவருடைய தலைமைத்துவம் மற்றும் உள்ளார்ந்த ஈடுபாடு ஆகியவற்றுக்காக பிரதமர் மோடிக்கு அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

அவருடன் செல்பி எடுத்த புகைப்படம் ஒன்றையும் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். 

Advertisement

இதுபற்றி மெலோனி வெளியிட்ட எக்ஸ் பதிவில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 75வது பிறந்த நாள் வாழ்த்துகள்.

அவருடைய வலிமை, மனவுறுதி மற்றும் கோடிக்கணக்கான மக்களை வழிநடத்தி செல்லும் திறமை ஆகியவை ஊக்கம் ஏற்படுத்த கூடியவை.

இந்தியாவை ஒளி நிறைந்த வருங்காலத்திற்கு தொடர்ந்து வழிநடத்தி செல்வதற்கும் மற்றும் நம்முடைய நாடுகளுக்கு இடையேயான உறவுகளை இன்னும் வலுப்படுத்தவும் தேவையான ஆரோக்கியம் மற்றும் சக்தியை அவர் பெற, நட்புணர்வு மற்றும் மதிப்பு ஆகியவற்றுடன், நான் வாழ்த்துகிறேன் என பதிவிட்டு உள்ளார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version