தொழில்நுட்பம்

5ஜி-யை மிஞ்சும் வேகம்! 2030-க்குள் 6ஜி தொழில்நுட்பம்… இந்தியாவில் புதிய இணையப் புரட்சி!

Published

on

5ஜி-யை மிஞ்சும் வேகம்! 2030-க்குள் 6ஜி தொழில்நுட்பம்… இந்தியாவில் புதிய இணையப் புரட்சி!

இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி), ஹைதராபாத், 2030-க்குள் 6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், இந்த தொழில்நுட்பத்தை வெறும் பயன்படுத்தும் நாடாக மட்டும் இல்லாமல், அதன் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் நாடாகவும் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.ஐ.டி ஹைதராபாத்தைச் சேர்ந்த முன்னணி தொலைத்தொடர்பு ஆராய்ச்சியாளரான பேராசிரியர் கிரண் குச்சி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய பேராசிரியர் குச்சி, 6ஜி தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள் 5ஜியை மிஞ்சும் திறனைக் கொண்டுள்ளன என வலியுறுத்தினார். அரசு நிறுவனங்கள், துறைகளின் ஒத்துழைப்புடன், ஐஐடி ஏற்கனவே 7GHz அலைவரிசையில் 6ஜி புரோட்டோடைப்களை உருவாக்கியுள்ளது.6ஜியின் சிறப்பம்சங்கள்:ஐ.ஐ.டி-ஹைதராபாத்தால் உருவாக்கப்பட்ட இந்தப் புரோட்டோடைப், மேம்பட்ட MIMO (Multiple-Input Multiple-Output) ஆன்டெனா வரிசைகளையும், புவிசார் சுற்றுப்பாதை (GEO), தாழ்வு புவி சுற்றுப்பாதை (LEO) ஆகிய இரண்டிற்கும் ஏற்ற செயற்கைக்கோள் அமைப்புகளையும் கொண்டுள்ளது. 6ஜி என்பது வெறும் “வேகமான 5ஜி” மட்டுமல்ல. இது நகர்ப்புறம், கிராமப்புறம், வீடுகளுக்குள், வெளியிடங்கள், நிலப்பரப்பு, கடல் மற்றும் வான் என எல்லா இடங்களிலும் அதிவேக இணைய இணைப்பை வழங்கும். மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) இதன் மையமாக இருக்கும் என்றும் பேராசிரியர் குச்சி குறிப்பிட்டார்.6ஜி தொழில்நுட்பம், அதிநவீன AR/VR அனுபவங்கள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த சாதனங்கள், தானியங்கி வாகனங்கள் மற்றும் ஸ்மார்ட் IoT சாதனங்கள் போன்றவற்றை பெரிய அளவில் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், விவசாயம் முதல் தொழிற்சாலைகள் வரை, பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, ராணுவம் முதல் பேரிடர் மீட்பு வரை என அனைத்து துறைகளிலும் இந்தியாவை மிக உற்பத்தித் திறன் மிக்கதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்ற இது உதவும்.”ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் புதிய தலைமுறை மொபைல் தொழில்நுட்பம் உலகை வந்தடைகிறது,” என்று கூறிய பேராசிரியர், 5ஜி தொழில் நுட்பம் 2010 முதல் 2020 வரை தரப்படுத்தப்பட்டது. இந்தியாவில் 5ஜி 2022-ல் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்னும் நாடு முழுவதும் விரிவாக்கப்பட்டு வருகிறது. “6ஜி தரப்படுத்துதல் பணிகள் 2021-ல் தீவிரமாகத் தொடங்கின, உலகளாவிய தரங்கள் 2029-க்குள் எதிர்பார்க்கப்படுகின்றன, மேலும் 2030-ஐ ஒட்டி பயன்பாட்டுக்கு வரும்” என்றும் அவர் கூறினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version