இந்தியா

தேர்தலுக்கு முன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து; இல்லை என்றால் ஜனாதிபதி ஆட்சி; சுயேச்சை எம்.எல்.ஏ மனு

Published

on

தேர்தலுக்கு முன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து; இல்லை என்றால் ஜனாதிபதி ஆட்சி; சுயேச்சை எம்.எல்.ஏ மனு

இன்று கூடும் இந்த சட்டமன்றத்தை இன்றோடு கலைத்துவிட்டு வரும் 2026 தேர்தலுக்கு முன் மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுகின்ற என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர், எதிர்கட்சியினரும் மக்களை திரட்டி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து மாநிலத்துக்கான உரிமைகளை பெறும் வரை தேர்தலை புறக்கணித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து மாநிலத்துக்கான உரிமையை பெற வேண்டும். என சுயேச்சை எம்எல்ஏ நேரு இன்று முதல்வர் சந்தித்து மனு கொடுத்துள்ளார்.புதுச்சேரி மாநில  சட்டபேரவை கூட்டத்தின் போது ஒரு மசோதா தாக்கல் செய்ய மசோதாவில் இடம்பெற இருக்கும் சாரம்சத்தில் முக்கியமானதாக அதிகாரிகளிடம் கோப்புகள் தேங்கினால் நாள் ஒன்றுக்கு ரூ. 250 அபராதம் விதிக்கப்படும் என்ற வகையில் மசோதா மற்றும் சில மசோதாக்கள் தாக்கல் செய்யப்போவதக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சட்டமன்றம் எத்தனை நாட்களுக்கு நடத்தப்படும் என்று கூறப்படவில்லை. அதேநேரத்தில் இப்படி ஒரு மசோதா தாக்கல் செய்யப்படும் போது அதில் உள்ள நிறைகுறைகளை விவாதிக்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமா? என்று தெரியப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் இன்னும் சுமார் ஆறு மாத காலத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வரவிருக்கிறது.அதற்குள் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றவும், நிலுவையில் உள்ள திட்டபணிகளை செய்து முடிக்கவும். அணைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து முனைப்புடன் செயலாற்ற வழிவகை செய்ய உறுப்பினர்கள் விவாதம் நடத்த வாய்ப்பளிக்க வேண்டும். அதேபோல மாநிலத்தில் முக்கிய பிரச்சனைகளாக, நகர மற்றும் புறநகர் பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் மாசடைந்து, தரமற்றதாக மாறி இருப்பது பற்றியும், வீதிகள் தோறும் நிலவும் குப்பைகள் அகற்றபடாத பிரச்சனைகள் பற்றியும், நகரம் மற்றும் புறநகர பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள், ஓடைகளில் மலக்கழிவுநீர் வழிந்தோடும் பிரச்சனைகள் பற்றியும்ஏழை, எளிய மக்கள் பயன்பெற கூடிய வீடுகட்டும் திட்டத்தின் மானியம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் மக்களின் பிரச்சனைகள் பற்றியும், கடந்த 2 மாதங்களாக ரேஷன் அரிசி போடாதது பற்றியும், 2022 ஆண்டு முதல் சென்டாக் மூலம் அளிக்கப்படும் காமராஜர் கல்வி நிதியுதவி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது பற்றியும், 2023 ஆண்டிலிருந்து 10 சதவீத இடஒதுக்கீட்டில் உயர்கல்வியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்விக்கான அரசாணை வெளியிடாமல் இருப்பது பற்றியும்அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கு வருமான உச்சவரம்பு பற்றியும்,  அரசு பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை பற்றியும், அரசு துறைகளில் நிலவும் காலிபணியிடங்கள் நிரப்பாதது பற்றியும், அரசு வேலைவாய்ப்பில் படித்த இளைஞர்களுக்கு வயது தளர்வு வழங்காதது பற்றியும், அரசு பணியில் இருந்த போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்காமல் இருப்பது பற்றியும், அரசு துறைகளில் ஒப்பந்த ஊழியர்களாக கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் பணிசெய்யும் ஊழியர்களுக்கு பணிநிரந்தரம் செய்வது பற்றியும்அரசு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு காலத்தோடு பணிஉயர்வு வழங்குவது பற்றியும், பொதுப்பணித்துறை மற்றும் பல அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்பட்ட போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களை கொண்டு காலி பணியிடங்களை நிரப்புவது பற்றியும், சென்ற ஆண்டு ஃபெஞ்சல் புயல் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டு பொருட்களை இழந்த மக்களுக்கு நிவாரணம் வழங்காதது பற்றியும்வர இருக்கின்ற மழைக்காலத்தை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றியும், நகர மற்றும் புறநகர பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடை பிரச்சனைகள் பற்றியும், அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழை, எளிய மக்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்க உறுதிப்படுத்துவது பற்றியும், வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது பற்றியும், புதுச்சேரி நகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம்நடைபெறும் பணிகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் முடிவடையாமல் உள்ள பணிகள் பற்றியும், மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது பற்றியும், சட்டபேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேச வாய்ப்பளித்து அனைத்து பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு காணும் விதமாக தற்போது கூட்டப்பட இருக்கின்ற சட்டமன்ற கூட்டதொடரை குறைந்தபட்சம் 10 நாட்களாவது தொடர்ந்து நடத்தி மக்களின் அடிப்படை தேவைகளையும்,  அப்படி இல்லையென்றால் இன்று கூடும் இந்த சட்டமன்றத்தை இன்றோடு கலைத்துவிட்டு வரும் 2026 தேர்தலுக்கு முன் மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.இந்த கோரிக்கைளை வலியுறுத்தி ஆளுகின்ற என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினரும், எதிர்கட்சியினரும் மக்களை திரட்டி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து மாநிலத்துக்கான உரிமைகளை பெறும் வரை தேர்தலை புறக்கணித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து மாநிலத்துக்கான உரிமையை பெற வேண்டும். அதுவரை குடியரசு தலைவரின் கீழ் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தி அதன்மூலம் உயர்அதிகாரிகளை ஒருங்கிணைத்து இரண்டு அதிகார மையமாக இருந்து கொண்டு செயல்படாமல் இருக்கும் புதுச்சேரி அரசு நிர்வாகத்தை ஒற்றை மைய அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்க வழிவகை செய்ய வேண்டும் .பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version