டி.வி
பாண்டியனின் வார்த்தைக்கு மறுப்பு தெரிவித்த கதிர்.. சரவணனை வம்பிழுக்கும் மயில்.!
பாண்டியனின் வார்த்தைக்கு மறுப்பு தெரிவித்த கதிர்.. சரவணனை வம்பிழுக்கும் மயில்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மயில் மீனா கிட்ட அரசி விஷயத்தில மாமா எடுத்த முடிவை நினைத்து நான் பிரமிச்சுப் போட்டேன் என்கிறார். அதைக் கேட்ட ராஜி அரசி விஷயத்தில மட்டுமில்ல எல்லா விஷயத்திலயும் மாமா பிரமிச்சுப் போற மாதிரி தான் முடிவெடுத்திருக்கிறார் என்று மயில் கிட்ட சொல்லுறார். இதனை அடுத்து கதிர் பாண்டியனைப் பார்த்து உடம்பு சரியில்லாத நேரத்தில எதுக்கு வெளியில போறீங்க என்று கேட்கிறார்.அதுக்கு பாண்டியன் வீட்டிலேயே இருந்தால் எல்லா வேலையும் ஆகிடுமா என்கிறார். பின் பாண்டியன் வயல் விக்கிற விஷயமா பேசிட்டு வாறன் என்கிறார். அதைக் கேட்ட எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். பின் பழனி அண்ணா உங்களுக்கு பணம் தாறதுக்காகத் தான் வயலை விற்கப் போறார் என்று சொல்லுறார். அதைக் கேட்ட கதிர் நாங்க இவரிட்ட பணம் கேட்கவே இல்லையே என்கிறார். அதைத் தொடர்ந்து பாண்டியன் சரி நான் உனக்கு உதவி செய்யல ராஜி உனக்கு டான்ஸ் ஆடி உதவி பண்ணுவாள் என நக்கலாகச் சொல்லுறார். பின் கதிர் ராஜி கிட்ட எனக்கு யாரோட உதவியும் இல்லாமல் முன்னுக்கு வரணும் என்று தான் விருப்பம் என்கிறார். அதைக் கேட்ட ராஜி மாமா கொடுக்கிற பணத்தை வாங்கிட்டு பிறகு நீ சம்பாதிச்சு திருப்ப கொடு என்று சொல்லுறார்.அதனை அடுத்து மயில் சரவணன் கிட்ட உங்கள எல்லாரும் ஏமாத்துறாங்க அது உங்களுக்கு தெரியலயா என்று கேட்கிறார். இதைக் கேட்ட சரவணன் நீ இப்புடி எல்லாம் கதைச்சால் நான் நீ பண்ணது எல்லாத்தையும் வீட்டில இருக்கிற எல்லாருக்கும் சொல்லிடுவேன் என்கிறார். பின் பாண்டியன் மீனாவோட அப்பா கிட்ட மீனாவைப் பற்றி நல்ல மாதிரி சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.