இந்தியா

புதுச்சேரி சட்டமன்ற அலுவலகத்தில் சர்ச்சைக்குரிய பேனர்: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு; சபாநாயகரிடம் மனு

Published

on

புதுச்சேரி சட்டமன்ற அலுவலகத்தில் சர்ச்சைக்குரிய பேனர்: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு; சபாநாயகரிடம் மனு

புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேனர் வைக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, சபாநாயகர் செல்வத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்ற உறுப்பினரும், புதிய அமைச்சருமான ஜான் குமாரின் அலுவலகம் வெங்கடா நகரில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேனர் வைக்கப்பட்டு, அவர் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், தினந்தோறும் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும், அரசு அலுவலகத்தில் தனிநபர் பேனர் வைத்து நலத்திட்டங்கள் வழங்குவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ராம் முனுசாமி, சட்டப்பேரவை சபாநாயகர் செல்வத்தை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், “காமராஜர் தொகுதியில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தொழிலதிபரின் பேனரை உடனடியாக அகற்ற வேண்டும், மேலும் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் செல்வம் உறுதியளித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version