இந்தியா
இந்தியரை சுட்டுக் கொன்ற அமெரிக்க போலீஸ்: உடலை சொந்த ஊர் கொண்டு வர வலியுறுத்தல்
இந்தியரை சுட்டுக் கொன்ற அமெரிக்க போலீஸ்: உடலை சொந்த ஊர் கொண்டு வர வலியுறுத்தல்
தெலுங்கானாவின் மஹபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நிஜாமுதீன்(30), அமெரிக்காவில் படித்து வந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறி, அவரது குடும்பத்தினரை மேற்கோள் காட்டி பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. அவரது தந்தை முகமது ஹஸ்னுதீன் சம்பவம் செப்டம்பர் 3 ஆம் தேதி தனது மகனின் நண்பர்களுடன் ஏற்பட்ட “சண்டைக்கு” பிறகு நடந்ததாகக் கூறப்படுகிறது. சரியான சூழ்நிலைகள் தெளிவாகத் தெரியவில்லை.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:மேலும், தனது மகனின் மரணம் குறித்து ஒரு நண்பர் மூலம் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், நேற்று (செப்டம்பர் 18) காலை தான் இது குறித்து உறுதியான தகவல் தனக்கு கிடைத்ததாகவும், ஹஸ்னுதீன் கூறியுள்ளார். இதனையடுத்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், தனது மகனின் உடலை இந்தியா கொண்டுவர உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.One Mohammed Nizamuddin-29 years resident of Mahbubnagar District in Telangana State, who went to persue Masters in the USA and was living in Santa Clara in California was shot dead by police during a commotion with his roommates, His mortal remains are lying in a hospital in… pic.twitter.com/7S8zQFFjJUஇன்று காலை அவர் (நிஜாமுதீன்) சாண்டா கிளாரா போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும், அவரது உடல் கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் உள்ள ஏதோ ஒரு மருத்துவமனையில் உள்ளது என்றும் எனக்குத் தெரியும். போலீசார் அவரை சுட்டுக் கொன்றதற்கான உண்மையான காரணங்கள் எனக்குத் தெரியவில்லை, ”என்று அவர் கடிதம் எழுதியுள்ளதாக பி.டி.ஐ(PTI) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது,#WATCH | Mahabubnagar, Telangana: A family from Mahabubnagar city is seeking assistance from the Indian and Telangana state governments to bring back the body of their son, Mohammad Nizamuddin, who was allegedly killed in a police shootout in California, USA, where he had gone… pic.twitter.com/Zl8Y6BGOaaதனது மகனின் உடலை இந்தியா கொண்டுவர உதவுமாறு வாஷிங்டன், டி.சி.யில் உள்ள இந்திய தூதரகத்தையும், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தையும் உத்தரவிடுமாறு ஹஸ்னுதீன் வெளியுறவு அமைச்சகத்திடம் வேண்டுகோள் விடுத்தார். தெலுங்கானாவின் மஜ்லிஸ் பச்சாவ் தஹ்ரீக் (MBT) கட்சியின் செய்தித் தொடர்பாளர் அம்ஜத் உல்லா கான், இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.,அதில், இந்த தந்தையின் முறையீட்டைப் பகிர்ந்துகொண்டு, இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.நிஜாமுதீன் “அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெறவும், மென்பொருள் நிபுணராகப் பணியாற்றவும் சென்றிருந்தார். “அவரது அறை தோழர்களுடன் ஏற்பட்ட குழப்பத்தின் போது அவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.