தொழில்நுட்பம்

சினிமா தியேட்டர் வீட்டுக்கு வந்தாச்சு… சோனியின் புதிய பிராவியா 6 சிறப்பம்சங்கள்!

Published

on

சினிமா தியேட்டர் வீட்டுக்கு வந்தாச்சு… சோனியின் புதிய பிராவியா 6 சிறப்பம்சங்கள்!

வீட்டிலேயே சினிமா தியேட்டர் அனுபவத்தை விரும்புகிறீர்களா? அப்படியானால் சோனியின் புதிய பிராவியா 6 சவுண்ட்பார் உங்களுக்கானது. சோனியின் 2 புதிய தயாரிப்புகளான பிராவியா தியேட்டர் சிஸ்டம் 6 & பிராவியா தியேட்டர் பார் 6 ஏன் சிறந்த தயாரிப்பு என்று பார்க்கலாம்.சிறப்பம்சங்கள் என்ன?இந்த 2 சவுண்ட்பார்களும் டால்பி அட்மாஸ் மற்றும் டிடிஎஸ்:எக்ஸ் போன்ற சினிமா தர ஆடியோ தொழில்நுட்பங்களுடன் வருகின்றன. இதில் பிராவியா தியேட்டர் சிஸ்டம் 6 ஒரு 5.1 சேனல் வயர்லெஸ் சரவுண்ட் சிஸ்டம் ஆகும். இதன் விலை ரூ.49,990, இந்த விலையில் இவ்வளவு சிறப்பான ஒலி அனுபவம் கிடைப்பது ஆச்சரியம்.வடிவமைப்பு & அமைப்புதியேட்டர் சிஸ்டம் 6 சவுண்ட்பார், மெட்டல் மற்றும் பிளாஸ்டிக் கலவையில் ஒரு பிரீமியம் தோற்றத்துடன் உள்ளது. இது ஒரு 55 இன்ச் டிவி-க்கு கீழே எளிதாகப் பொருந்தும். ஆனால் இதன் சப்வூஃபர் (subwoofer) மிகவும் பெரியதாக உள்ளது. அதன் அளவு பெரியதாக இருந்தாலும், அது தரும் ஒலி அனுபவம் பிரமாதம். இந்த சிஸ்டத்துடன் 2 வயர்லெஸ் ஸ்பீக்கர்களும் வருகின்றன. அவற்றை உங்கள் இருக்கைக்குப் பின்னால் வைத்தால், உண்மையான சரவுண்ட் சவுண்ட் அனுபவம் கிடைக்கும்.செட்டப் செய்வது எப்படி?இந்த சாதனத்தை செட்டப் செய்ய நிபுணர்களின் உதவி தேவையில்லை. அனைத்து இணைப்புகளையும் 10 நிமிடங்களுக்குள் செய்துவிடலாம். மேலும், சோனி பிராவியா கனெக்ட் ஆப் (Sony Bravia Connect app)-ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து, அறையின் தன்மைக்கு ஏற்ப ஒலியைச் சரிசெய்ய முடியும். இது ரிமோட்டிலும் உள்ள சில கூடுதல் அம்சங்களை ஆப் மூலம் கட்டுப்படுத்த உதவுகிறது.ஒலித் தரம் எப்படி இருந்தது?இதுதான் இந்த சவுண்ட்பாரின் மிக முக்கியமான அம்சம். திரைப்படங்கள், இசை, கேமிங் என அனைத்திலும் இதன் ஒலித் தரம் மிகச் சிறப்பாக உள்ளது. ‘வாய்ஸ் மோட்’ (Voice Mode) அம்சத்தை ஆன் செய்த பிறகு, அனைத்தும் தெளிவாகக் கேட்கின்றன.’சவுண்ட் ஃபீல்ட்’ (Sound Field) மோடில் டால்பி அட்மாஸ் திரைப்படங்களைப் பார்க்கும்போது, ஒரு உண்மையான சினிமா தியேட்டர் அனுபவத்தை தரும். இசைப் பாடல்கள், குறிப்பாக பேஸ் (bass) அதிகம் உள்ள பாடல்கள், மிகவும் சக்திவாய்ந்ததாகவும், பரந்ததாக ஒலிக்கிறது. பெரிய அறை நிரப்புவதற்கு இதன் சத்தம் போதுமானதாக இருக்கும்.ரூ.49,990 விலையில், சோனி பிராவியா தியேட்டர் சிஸ்டம் 6 ஒரு சிறந்த சவுண்ட்பார். முதன்முறையாக ஹோம் தியேட்டர் அமைப்பை வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான தேர்வு. இதன் அற்புதமான ஒலித் தரம் மற்றும் எளிமையான அமைப்பு, விலைக்கு ஏற்ற மதிப்பைத் தருகிறது. இந்த பண்டிகைக் காலத்தில் நீங்கள் வாங்கக்கூடிய சிறந்த சவுண்ட்பார் இது என்பதில் சந்தேகமில்லை.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version