உலகம்

சூடானில் மத வழிபாட்டு தலம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 43 பேர் உயிரிழப்பு

Published

on

சூடானில் மத வழிபாட்டு தலம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 43 பேர் உயிரிழப்பு

சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.

அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.

Advertisement

இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு டொர்ப் மாகாணம் எல் பெஷர் நகரில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் மீது துணை ராணுவப்படையினர் டிரோன் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 43 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

Advertisement

லங்கா4 (Lanka4)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version