தொழில்நுட்பம்

உங்க போனில் 2 சிம் இருக்கா? டேட்டா வேண்டாம், ஆனால் கால்ஸ் தேவை! இந்த பிளான்-ஸ் உங்களுக்காகத்தான்!

Published

on

உங்க போனில் 2 சிம் இருக்கா? டேட்டா வேண்டாம், ஆனால் கால்ஸ் தேவை! இந்த பிளான்-ஸ் உங்களுக்காகத்தான்!

உங்கள் போனில் 2 சிம் கார்டுகளைப் பயன்படுத்துகிறீர்களா? முக்கியப் பயன்பாட்டில் இல்லாத 2-வது சிம்மிற்கு அதிக ரூபாய் செலவு செய்து ரீசார்ஜ் செய்கிறீர்களா? உங்களுக்காகவே ஜியோ, ஏர்டெல், மற்றும் வோடபோன் ஐடியா (Vi) நிறுவனங்கள் சில மலிவான மற்றும் நீண்ட கால வேலிடிட்டி கொண்ட பிளான்களை அறிமுகப்படுத்தி உள்ளன. இந்த பிளான்கள் உங்கள் 2-வது சிம் கார்டை குறைந்த செலவில் ஆக்டிவாக வைத்திருக்க உதவுகின்றன. மேலும், இன்கம்மிங், அவுட்கோயிங் கால்ஸ், எஸ்.எம்.எஸ் போன்ற அடிப்படை வசதிகளையும் வழங்குகின்றன.ரிலையன்ஸ் ஜியோ – ரூ. 448 திட்டம்வேலிடிட்டி: 84 நாட்கள்பயன்கள்: அன்லிமிடெட் கால்ஸ் + 1000 எஸ்.எம்.எஸ்டேட்டா: இல்லைஉங்கள் 2வது சிம்மிற்கு கால்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸும் மட்டுமே தேவை என்றால், இந்த திட்டம் மிகச் சிறந்த தேர்வாகும். இதைவிட நீண்ட கால வேலிடிட்டி வேண்டுமென்றால், ஜியோவின் ரூ.1,748 திட்டத்தில் 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.ஏர்டெல் – ரூ. 469 திட்டம்வேலிடிட்டி: 84 நாட்கள்பயன்கள்: அன்லிமிடெட் கால்ஸ் + 900 எஸ்.எம்.எஸ்டேட்டா: இல்லைகூடுதல்: Perplexity Pro AI-க்கு இலவசமாக அணுகலாம் ஏர்டெல்லின் இந்த திட்டம், குறைந்த செலவில் கால்ஸ் மற்றும் மெசேஜ்களுக்காக 2-வது சிம்மை ஆக்டிவாக வைத்திருக்க உதவுகிறது.வோடபோன் ஐடியா (Vi) – ரூ. 470 திட்டம்வேலிடிட்டி: 84 நாட்கள்பயன்கள்: அன்லிமிடெட் கால்ஸ்+ 900 எஸ்.எம்.எஸ்டேட்டா: இல்லைவி.ஐ-யின் இந்தத் திட்டமும் இதேபோன்ற பலன்களை வழங்குகிறது. இதுவும் 2-வது சிம் கார்டைப் பயன்படுத்துபவர்களுக்கு சிறந்த, சிக்கனமான தேர்வாகும்.உங்கள் 2வது சிம் கார்டு பெரும்பாலும் கால்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ்ஸிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றால், ஜியோ, ஏர்டெல் மற்றும் வி.ஐ. நிறுவனங்களின் இத்திட்டங்கள் தேவையற்ற செலவை மிச்சப்படுத்துவதோடு, உங்கள் எண்ணையும் நீண்ட காலத்திற்குச் செயல்பாட்டில் வைத்திருக்க உதவுகின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version