விளையாட்டு

வெற்றிப் பாதைக்கு திரும்புமா தமிழ் தலைவாஸ்? ஹரியானா ஸ்டீலர்சுடன் இன்று மோதல்

Published

on

வெற்றிப் பாதைக்கு திரும்புமா தமிழ் தலைவாஸ்? ஹரியானா ஸ்டீலர்சுடன் இன்று மோதல்

12 அணிகள் களமாடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் உள்அரங்க மைதானத்தில் நடைபெற்ற 42-வது போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 43 – 29 புள்ளிகள் கண்ணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று சனிக்கிழமை இரவு 9 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் 44-வது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. நேற்றைய ஆட்டத்தில் படுதோல்வியை சந்தித்த தமிழ் தலைவாஸ் பலம் பொருந்திய ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை சந்திக்கிறது. அந்த அணி தோல்வியில் இருந்து மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்க கடுமையாக போராடும். அதற்கு முட்டுக்கட்டை போடவே ஹரியானா ஸ்டீலர்ஸ் நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. நேருக்கு நேர் புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் – ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இதுவரை 13 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஹரியானா ஸ்டீலர்ஸ் 8 போட்டிகளிலும், தமிழ் தலைவாஸ் 2 போட்டிகளிலும் வென்றுள்ளன. 3 போட்டிகள் டிராவில் முடித்தனர். சுவாரசியமாக, அந்த மூன்றும் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் மூன்று போட்டிகள் ஆகும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version