உலகம்

பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்த மூன்று பிரபல நாடுகள்

Published

on

பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்த மூன்று பிரபல நாடுகள்

கடந்த 2023ம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 

அதேவேளை, பாலஸ்தீனத்தை தனிநாடாக 140க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை. 

Advertisement

இதற்கிடையே, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல், இது ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவான நிலைப்பாடு என குற்றம் சாட்டியுள்ளது. 

இந்நிலையில், தங்களை தனி நாடாக அங்கீகரித்ததற்காக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது.

Advertisement

லங்கா4 (Lanka4)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version