இந்தியா

திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த நால்வருக்கு வழக்குப்பதிவு!

Published

on

திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த நால்வருக்கு வழக்குப்பதிவு!

திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் நால்வர் மீது பொலிஸார்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்  விஜய் கடந்த சனிக்கிழமை நாகை மற்றும் திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து வீதி  மார்க்கமாக நாகப்பட்டினம் சென்று, பின்னர் திருவாரூருக்கு நண்பகல்  3 மணியளவில் சென்றிருந்தார்.

Advertisement

இதன்போது திருவாரூர் தெற்கு வீதியில் விஜயின் மக்கள் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது   த.வெ.க நிர்வாகிகள் கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்து விஜயை வரவேற்றனர். தனது பிரசார வாகனத்தில் நின்றபடி அந்த மாலையை விஜய் ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையே, திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட பிரிவின் கீழ் ஜே.சி.பி உரிமையாளர் மற்றும் த.வெ.க நிர்வாகிகள் மீது இவ்வாறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version