டி.வி

ரூம் கட்டினா நடக்க வேண்டியது எல்லாம் நடக்கும் மீனா.. முத்துக்கு வந்த பேராசை

Published

on

ரூம் கட்டினா நடக்க வேண்டியது எல்லாம் நடக்கும் மீனா.. முத்துக்கு வந்த பேராசை

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் ,  முத்துவிடம் அவருடைய நண்பர்கள் எப்போ குழந்தை பெற்றுக் கொள்ளப் போகின்றாய் என்று அட்வைஸ் பண்ணுகின்றார்கள். அதேபோல மீனாவின் நண்பிகளும் மீனாவுக்கு குழந்தை விஷயத்தில் அட்வைஸ் பண்ணுகிறார்கள். வீட்டிற்கு வந்த மனோஜ் ரோகிணிக்கு  பூ கொடுக்கின்றார் . அதற்கு நீயா வாங்கினா என்று கேட்க, சிக்னல்ல ஒரு பாட்டி பூ வாங்குமாறு டார்ச்சர் பண்ணினாங்க.. அதனால வாங்கினேன் என்று சொல்லுகின்றார் மனோஜ் . இதன் போது வந்த ஸ்ருதி.  இன்றைக்கு  புருஷன் பொண்டாட்டிக்கு பூ வைக்கிறது தான் ட்ரெண்டிங்  என்று மனோஜை ரோகிணிக்க பூ வைக்குமாறு சொல்லி அதனை வீடியோ எடுக்கிறார். அதன் பின்பு  ரவியை தனக்கு வைத்து விடுமாறு சொல்லி எடுக்கின்றார்.  விஜயா வீட்டுக்கு வந்ததும் அண்ணாமலையை  அவருக்கு பூ வைத்து விடச் சொல்லி வீடியோ எடுக்கின்றார்.இதைத்தொடர்ந்து அண்ணாமலை  மீனாவுக்கு அட்வைஸ் பண்ணுகின்றார் .  க்ரிஷ் பற்றி கேட்டு  உங்களுக்கு என்று ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ளுங்கள் என சொல்லுகின்றார்.  அதன் பின்பு மீனா  குழந்தையை பற்றி யோசித்துக்கொண்டு உள்ளார். இறுதியில் முத்து மீனாவுக்கு பூ வாங்கி கொண்டு வந்து வைத்து விடுகின்றார் .  அதன் பின்பு இருவரும்  ஒரே விஷயத்தை பற்றி  யோசித்துப் பேசுகின்றார்கள் .  மேலும் கூடிய விரைவில் மேலே ரூம் கட்ட வேண்டும்.. அதன் பின்பு நடக்க வேண்டியது எல்லாம் நடக்கும் என்று சொல்லுகின்றார் முத்து. இதுதான் இன்றைய எபிசோட் .

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version