வணிகம்

நவம்பர் 3 முதல் மாறும் யுபிஐ விதிகள்: இனி பணம் அனுப்பும் முறை இன்னும் வேகமாக

Published

on

நவம்பர் 3 முதல் மாறும் யுபிஐ விதிகள்: இனி பணம் அனுப்பும் முறை இன்னும் வேகமாக

இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் முதுகெலும்பாக விளங்கும் யுபிஐ (Unified Payments Interface), நவம்பர் 3, 2025 முதல் புதிய பரிவர்த்தனை விதிகளைக் காண உள்ளது. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிவித்துள்ள இந்த மாற்றங்கள், வாடிக்கையாளர் மற்றும் வர்த்தக பரிவர்த்தனைகளை மேலும் வேகப்படுத்தவும், பாதுகாப்பானதாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது, யுபிஐ ஆனது ஒரு நாளைக்கு பத்து செட்டில்மெண்ட் சுழற்சிகளை (settlement cycles) RTGS (Real-Time Gross Settlement) வழியாகச் செயல்படுத்துகிறது. இந்தச் சுழற்சிகளில் அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் (authorised transactions) மற்றும் சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகள் (dispute transactions) இரண்டும் ஒன்றாகவே கையாளப்படுகின்றன. எனினும், கடந்த சில ஆண்டுகளாக யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அபரிமிதமாக உயர்ந்துள்ளதால், இந்த ஒருங்கிணைந்த முறை சில சமயங்களில் தாமதங்களை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகளைத் தனித்தனியாகப் பிரித்து கையாள என்.பி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.புதிய செட்டில்மெண்ட் சுழற்சிகள்:நவம்பர் 3 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் மட்டுமே தினமும் நடைபெறும் பத்து சுழற்சிகளில் (Cycle I முதல் X வரை) கையாளப்படும். அதே நேரத்தில், சர்ச்சைக்குறிய பரிவர்த்தனைகளுக்காக பிரத்யேகமாக இரண்டு புதிய சுழற்சிகள் (DC1 மற்றும் DC2) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள்:Cycle I: நள்ளிரவு 9 மணி முதல் நள்ளிரவு வரைCycle II: நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரைCycle III: அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரைCycle IV: காலை 7 மணி முதல் 9 மணி வரைCycle V: காலை 9 மணி முதல் 11 மணி வரைCycle VI: காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரைCycle VII: மதியம் 1 மணி முதல் 3 மணி வரைCycle VIII: மாலை 3 மணி முதல் 5 மணி வரைCycle IX: மாலை 5 மணி முதல் 7 மணி வரைCycle X: மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரைசர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகள்:DC1: நள்ளிரவு முதல் மாலை 4 மணி வரைDC2: மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரைமாற்றங்களின் முக்கிய அம்சங்கள்:அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் தனிச் சுழற்சிகளில் கையாளப்படுவதால், பணப்பரிவர்த்தனை மேலும் விரைவாகவும், தடையின்றியும் நடைபெறும்.சர்ச்சைக்குறிய தனிச் சுழற்சிகள், சிக்கல்களை உடனடியாக அடையாளம் கண்டு, விரைவாகத் தீர்வு காண உதவும்.செட்டில்மென்ட் நேரங்கள், ரீகன்சிலியேஷன் அறிக்கைகள், GST அறிக்கைகள் உள்ளிட்ட மற்ற செட்டில்மென்ட் விதிகள் மாறாமல் இருக்கும்.மற்றொரு செய்தியில், பழைய பேடிம் (@paytm UPI) ஐடி ஹேண்டில்களுடன் இணைக்கப்பட்ட அனைத்து ஆட்டோபே கட்டளைகளையும் நிறுத்துவதற்கான காலக்கெடுவை, என்.பி.சி.ஐ. இரண்டு மாதங்களுக்கு, அதாவது அக்டோபர் 31, 2025 வரை நீட்டித்துள்ளது என்று செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version