வணிகம்

புதிய உச்சத்தை தொட்ட விலை: ரூ.84,000-ஐ தாண்டியது ஒரு சவரன்

Published

on

புதிய உச்சத்தை தொட்ட விலை: ரூ.84,000-ஐ தாண்டியது ஒரு சவரன்

உலகளாவிய போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 16 அன்று, ஒரு சவரன் தங்கம் ரூ.82,000-ஐத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 20) அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.480 உயர்ந்து ரூ.82,320-க்கு விற்பனையானது.நேற்றைய நிலவரம் (செப்டம்பர் 22)தங்கம் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், நேற்று ஒரே நாளில் இரண்டு முறை விலை ஏற்றம் கண்டது.காலை நிலவரப்படி: 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,360 ஆகவும், ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து, ரூ.82,880 ஆகவும் விற்பனையானது.மாலை நிலவரப்படி: மீண்டும் ஒருமுறை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,430 ஆகவும், ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து, ரூ.83,440 ஆகவும் விற்பனையானது.இதனால், நேற்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,120 அதிகரித்தது.இன்றைய நிலவரம்இன்று தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.84,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ரூ.10,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து, ரூ.149-க்கு விற்பனையாகிறது. கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, பார் வெள்ளி ரூ.1,49,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version