உலகம்
இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம்; 20பேருக்கும் மேற்பட்டோர் ஆபத்து நிலையில்!
இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம்; 20பேருக்கும் மேற்பட்டோர் ஆபத்து நிலையில்!
வடக்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கமொன்று இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
தென் அமெரிக்க கொலம்பியாவில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கச் சுரங்கங்களில் பணியாற்றி வருகின்ற நிலையில் கடந்த ஆண்டு மட்டும் 6.6 தொன் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டது. அதேநேரத்தில், சட்டவிரோதமாக இயங்கி வரும் சில தங்க சுரங்கத்தில் விபத்துகளும் நிகழ்கிறது. அந்த வகையில், வடக்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் இடிபாடுகளில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி கொண்டதுடன் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.