வணிகம்
இரண்டே நாட்களில் சவரனுக்கு ரூ.2,800 உயர்வு: இன்னைக்கு தங்கம் வாங்க சான்ஸ் இருக்கா? ரேட் செக் பண்ணுங்க
இரண்டே நாட்களில் சவரனுக்கு ரூ.2,800 உயர்வு: இன்னைக்கு தங்கம் வாங்க சான்ஸ் இருக்கா? ரேட் செக் பண்ணுங்க
சர்வதேச பொருளாதார நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்ததாலும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டதாலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.தங்கம் விலை உச்சம் தொட்டது!கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி, தங்கத்தின் விலை ரூ.82,320 ஆக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. தங்கம் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று (செப்டம்பர் 23) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை காலை நிலவரப்படி கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ரூ.10,500-க்கும், ஒரு பவுன் ரூ.560 உயர்ந்து ரூ.84,000-க்கும் விற்பனையானது.மாலை நிலவரப்படி மீண்டும் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.10,640-க்கும், பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சென்னையில் தங்கம் ஒரு பவுனுக்கு ரூ.2,800 வரை உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இன்று விலை குறைந்ததுஅதிர்ச்சிக்குள்ளான மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 24) தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.10,600-க்கும், ஒரு பவுன் ரூ.320 குறைந்து ரூ.84,800-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலைவெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நிலையான விலையில் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.150-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,50,000-க்கும் விற்கப்படுகிறது.