வணிகம்

ஏடிஎம்-ல் பி.எஃப். பணம் எடுக்கலாம்: ஆனால், இதை செய்தால் அபராதம் உண்டு- இ.பி.எஃப்.ஓ. கடும் எச்சரிக்கை

Published

on

ஏடிஎம்-ல் பி.எஃப். பணம் எடுக்கலாம்: ஆனால், இதை செய்தால் அபராதம் உண்டு- இ.பி.எஃப்.ஓ. கடும் எச்சரிக்கை

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஊழியர்கள் தங்கள் பிஎஃப் (PF) கணக்கில் உள்ள பணத்தை விதிகளை மீறி, தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினால், அந்தப் பணத்தை அபராதத்துடன் திரும்பப் பெறும் அதிகாரம் இ.பி.எஃப்.ஓ. -க்கு உள்ளது. ஏன் இந்த எச்சரிக்கை?நிறைய பேர், வீடு கட்டுவது, மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற அவசரத் தேவைகளுக்காக பி.எஃப். தொகையை எடுக்கின்றனர். ஆனால், இந்தத் தொகையை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும்போது, அது விதிகளின் மீறலாகக் கருதப்படுகிறது.உதாரணமாக, வீட்டுக் கடன் கட்ட பிஎஃப் பணத்தை எடுத்ததாகக் கூறிவிட்டு, அந்தப் பணத்தை வேறு ஒரு தேவைக்காகப் பயன்படுத்தினால், இ.பி.எஃப்.ஓ. அதைத் தவறான பயன்பாடாகக் கருதும். அப்போது, அந்தத் தொகையை அபராதத்துடன் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கும்.புதிய தொழில்நுட்பம், கூடுதல் எச்சரிக்கை!இ.பி.எஃப்.ஓ. 3.0 என்ற புதிய டிஜிட்டல் தளம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இது, பிஎஃப் சேவைகளை இன்னும் வேகமாகவும், எளிதாகவும் மாற்றும். இந்தத் தளத்தில், ஏடிஎம் மற்றும் யுபிஐ (UPI) மூலம் பி.எஃப். பணத்தை எடுக்கும் வசதி வரவுள்ளது. இது பணத்தை எளிதாக எடுக்க வழிவகுத்தாலும், அதை தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.பி.எஃப். என்பது எதிர்காலத்திற்கான பாதுகாப்புப் பெட்டகம்!Withdrawing PF for wrong reasons can led to Recovery under EPF Scheme 1952.Protect your future, use PF only for the right needs. Your PF is your lifelong safety shield!#EPFO#EPFOwithYou#HumHainNa#ईपीएफओ@PMOIndia@narendramodi@LabourMinistry@MIB_India@mansukhmandviya… pic.twitter.com/HMxUpWFairஇ.பி.எஃப்.ஓ. தனது X பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், “தவறான காரணங்களுக்காக பி.எஃப். பணத்தை எடுப்பது, 1952-ஆம் ஆண்டு பி.எஃப். திட்டத்தின் கீழ் பணத்தை மீட்டெடுப்பதற்கு வழிவகுக்கும். உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். பி.எஃப். பணத்தை சரியான தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். உங்கள் பி.எஃப். உங்கள் வாழ்நாள் பாதுகாப்பு கவசம்!” என்று குறிப்பிட்டுள்ளது.முக்கிய விதிகள் என்ன?பி.எஃப். பணத்தை முழுவதுமாக எடுப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன:*ஓய்வு பெற்ற பிறகு*இரண்டு மாதங்களுக்கு மேல் வேலையில்லாமல் இருக்கும் போதுபகுதியளவு பணம் எடுப்பதற்கு சில குறிப்பிட்ட காரணங்கள் உள்ளன:*வீடு வாங்குதல், கட்டுதல் அல்லது புதுப்பித்தல்*நிலுவையில் உள்ள கடன்களை செலுத்துதல்*மருத்துவ அவசரத் தேவைகள்*குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம்இந்த தேவைகளுக்காகப் பணம் எடுக்கும்போது எந்த ஆவணங்களும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. ஆனால், பணத்தை எடுத்த பிறகு அதை எந்த நோக்கத்தில் பயன்படுத்தினோம் என்பதை இ.பி.எஃப்.ஒ. ஆய்வு செய்ய வாய்ப்புள்ளது.ஒருவேளை, தவறான பயன்பாடு நிரூபிக்கப்பட்டால், அந்தத் தொகையை அபராதத்துடன் திரும்பப் பெற இ.பி.எஃப்.ஒ -க்கு முழு அதிகாரம் உள்ளது. மேலும், மூன்று ஆண்டுகளுக்கு, அந்த உறுப்பினர் எந்த ஒரு புதிய தொகையையும் எடுக்க முடியாது.உங்கள் பி.எஃப். சேமிப்பு, உங்கள் ஓய்வுக்காலத்திற்கு ஒரு வலுவான பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும். அவசரத் தேவைக்காக அதை அணுகினாலும், அதன் நோக்கத்தை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதே புத்திசாலித்தனம்!

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version