உலகம்
நோர்வேயில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு!
நோர்வேயில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு!
நோர்வேயின் தலைநகர் மத்திய ஒஸ்லோவில் செவ்வாய்க்கிழமை (23) குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, அதே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது வெடிகுண்டு கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிக்கச் செய்ததாகவும், சந்தேக நபர் ஒருவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நோர்வே பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.
பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகிலும், அரச அரண்மனை மற்றும் இஸ்ரேலிய தூதரகத்திலிருந்து சுமார் 500 மீட்டர் (546 கெஜம்) தொலைவிலும், அந்த இடத்தில் காயங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஒஸ்லோ மற்றும் கோபன்ஹேகனின் விமான நிலையங்களுக்கு அருகில் ட்ரோன்கள் தென்பட்டு ஒரு நாளுக்குப் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.