உலகம்
வாஷிங்டனில் டிரம்புக்கு தங்க சிலை!!
வாஷிங்டனில் டிரம்புக்கு தங்க சிலை!!
அமெரிக்க தலைநகருக்கு வெளியே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரமாண்டமான தங்கச் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. பிட்காயினை கையில் ஏந்தி நிற்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள இந்த சிலை சுமார் 12 அடி உயரம் கொண்டதென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களின் நிதியில் உருவாக்கப்பட்டுள்ள இச்சிலை தற்போது மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிலையின் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிவரும் நிலையில், டிஜிட்டல் நாணயத்தின் எதிர்காலம், பணவியல் கொள்கை மற்றும் நிதிச் சந்தைகளில் மத்திய அரசின் பங்கு பற்றிய விவாதத்தைத் தூண்டும் நோக்கில் இது உருவாக்கப்பட்டதா? எனக் கேள்விகள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.