இலங்கை
ஆயுள்வேத வைத்தியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!
ஆயுள்வேத வைத்தியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!
அரச சித்த வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் ஆயுள்வேத வைத்தியர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்கக் கோரி நேற்று வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் கைதடி சித்தவைத்தியசாலைக்கு முன்பாக இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது ஆயுர்வேத வைத்தியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மேலதிக கொடுப்பனவை உடன் வழங்கு, சம்பள மறுசீரமைப்பு எங்கே, நிர்வாகமே மமதை வேண்டாம் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தா போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.