சினிமா

இந்திய கிரிகெட் அணி கேப்டனுடன் காதல்!! ப்ரேக்கப் செய்த பிரபல நடிகை…

Published

on

இந்திய கிரிகெட் அணி கேப்டனுடன் காதல்!! ப்ரேக்கப் செய்த பிரபல நடிகை…

கிரிக்கெட்டிற்கும் நடிகைகளுக்குமான பந்தம் எப்போது இருந்து வருகிறது. கிரிக்கெட் வீரர்களை நடிகைகள் டேட்டிங் செய்தும் திருமணம் செய்வதும் வழக்கமான ஒன்று. அப்படி விராட் கோலி – அனுஷ்கா சர்மா ஜோடி மட்டுமில்லாமல் சிலரது காதல் நிஜமாகி திருமணத்தில் முடிந்திருக்கிறது. ஆனால் சிலருக்கு பல காரணங்களால் பிரிவு ஏற்பட்டும் இருக்கிறது.மாதுரி தீக்ஷித் – அஜய் ஜடேஜாஅப்படி, தன்னுடைய அழகாலும், திறமையான நடிப்பாலும் பாலிவுட் திரையுலகில் ஆதிக்கம் செலுத்திய நடிகை மாதுரி தீக்ஷித், அப்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனை காதலித்து பிரிந்த சம்பவம் நடந்துள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த மாதுரி, நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜாவை சந்தித்துள்ளார்.குறுகிய கலாத்தில் இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. நட்பு காலப்போக்கில் காதலாக மாறியதாக தகவல் வெளியானது. அப்போது மாதுரி – அஜய் ஜடேஜா இடையேயான காதல் பரபரப்பாக பேசப்பட்டது. 1999 – 2000 ஆண்டு காலக்கட்டதில் அஜய் ஜடேஜா 13 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி கேப்டனாக செயல்பட்டார். அதேபோல் 1995ல் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முக்கிய பங்கினையும் ஆற்றினார்.சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் திடீரென எதிர்பாரத ஸ்பீடு ப்ரேக் ஏற்பட்டது. 2000 ஆம் ஆண்டு மேட்ச் ஃபிக்சிங் ஊழலில் அஜய் ஜடேஜா சிக்க தலைப்பு செய்தியாக பெரியளவில் பேசப்பட்டார். இதன்மூலம் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வர, தனிப்பட்ட வாழ்க்கையும் பாதித்தது. மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டால், மாதுரி – அஜய் திருமணத்திற்கு குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இருவரும் பிரிந்தனர்.பின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று பாலிவுட் படங்களில் நடித்தார். டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டார். தற்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார் அஜய் ஜடேஜா. அவரது மனைவி அதிதி ஜடேஜா. தம்பதிக்கு 2 குழந்தைகள். அதேபோல் நடிகை மாதுரி தீக்ஷித் 1999ல் ஸ்ரீராம் என்பவரை திருமணம் செய்து, அமெரிக்காவில் செட்டிலாகி மீண்டும் இந்தியா பக்கம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version