சினிமா

இன்று முதல் ஆக்சன் தொடங்கட்டும்.! திடீரென என்ட்ரி கொடுத்த டி. ராஜேந்தர்..எங்கு தெரியுமா?

Published

on

இன்று முதல் ஆக்சன் தொடங்கட்டும்.! திடீரென என்ட்ரி கொடுத்த டி. ராஜேந்தர்..எங்கு தெரியுமா?

ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் தான் மகுடம். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இதன் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் மூன்று கெட்டப்புகளில் விஷால் காணப்படுகிறார்.மகுடம் படத்தில் விஷால், துஷாரா விஜயன், அஞ்சலி, தம்பி ராமையா, அர்ஜெய் உள்ளிட்ட பலர்  நடித்து வருகின்றனர் . இதனை ஆர்.பி.செளத்ரி தயாரித்து வருகிறார். அவருடைய தயாரிப்பில் உருவாகி வரும் 99-வது படம் இதுவாகும்.இந்த படத்திற்கான படப்பிடிப்பு  தற்போது சென்னை உள்ள டி ஆர் கார்டன் படப்பிடிப்பு தளத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், குறித்த இடத்துக்குச் சென்ற டி. ராஜேந்தர்  அங்கு தனது வாழ்த்துக்களை பட குழுவினருக்கு தெரிவித்துள்ளார்.  தற்போது  டி. ராஜேந்தர்  விஷாலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றன.இதன்போது விஷால் கூறுகையில்,  எனது விருப்பமான நடிகரும்    நபருமான டி. ராஜேந்தர்சாரிடம் இருந்து இதயபூர்வமான வாழ்த்துக்கள் கிடைத்துள்ளன.இதை தவிர வேறு என்ன எதிர்பார்க்கலாம்.  அவர் எனது மகுடம் படத்திற்காக இந்த செட்டிற்கு வந்தார்.  இது தற்செயலாக மார்க் ஆண்டனி படப்படிப்பு நடந்த அதே இடம்.  அவரை சந்திக்கும் போது உத்வேகமாக உணர்கின்றேன். இன்று முதல் ஆக்சன் தொடங்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version