இலங்கை
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் ; உயர் நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் ; உயர் நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு
நாட்டின் கடல் வளத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்திய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
குறித்த கப்பலின் தீ விபத்து தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் வழக்குகளில் உத்தரவிடப்பட்ட இழப்பீட்டை செலுத்தத் தவறியதற்காக, வெளிநாட்டு கப்பல் நிறுவனத்துக்கு எதிராக கண்டறியப்பட்ட விடயங்களை ஆராய்ந்து எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு சட்ட மாஅதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.