இலங்கை
ஏற்றுமதி வருவாய் 11 பில்லியன் டொலர்!
ஏற்றுமதி வருவாய் 11 பில்லியன் டொலர்!
இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 11 பில்லியன் டொலரைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருவாய் 11,554.32 மில்லியன் டொலராகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட் டத்துடன் ஒப்பிடும்போது 6.61 சதவீத அதிகரிப்பாகும்.