இலங்கை

ஓடும் பேருந்தில் இளைஞன் செய்த முகம்சுழிக்கும் செயல் ; பரிதாபமாக பிரிந்த உயிர்

Published

on

ஓடும் பேருந்தில் இளைஞன் செய்த முகம்சுழிக்கும் செயல் ; பரிதாபமாக பிரிந்த உயிர்

சக பயணியால் தாக்கப்பட்டு பேருந்திலிருந்து கீழே விழுந்த நபரொருவர் பல மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நாரமல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் களுகமுவ, ரத்மல் பொக்குன பகுதியைச் சேர்ந்த 52 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர் 19 வயதுடைய வேலையற்ற இளைஞர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்த தாக்குதல் 12.11.2024 அன்று நடந்ததாகவும், அன்றைய தினம் நாரம்மலவிலிருந்து குருநாகல் செல்லும் தனியார் பேருந்தில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த சம்பவத்திற்கு வழிவகுத்தது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 உயிரிழந்தவர் மதுபோதையில் இருந்ததாகவும், பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதன் போது சந்தேகநபர் குறித்த நபரை உதைத்ததாகவும் கூறப்படுகிறது.

தாக்குதலில் பேருந்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட அவர், பலத்த காயமடைந்து குருநாகல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 18.05.2025 அன்று உயிரிழந்தார்.

Advertisement

சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், மூளையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் மரணம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

22.09.2025 அன்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், சந்தேக நபரை நாளை, 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version