இலங்கை
கோர விபத்து; நால்வர் உயிரிழப்பு!
கோர விபத்து; நால்வர் உயிரிழப்பு!
குருணாகல் – அனுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வான் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்து இன்று அதிகாலை 04.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தலாவ பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் வானில் பயணித்தவர்கள் எனவும் மேலும், மூவர் காயமடைந்துள்ளனர் எனவும், அவர்கள் சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.