இலங்கை
சட்டத்தரணிகளின் முறைப்பாட்டைத் தொடர்ந்து மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் பதவி விலகல்
சட்டத்தரணிகளின் முறைப்பாட்டைத் தொடர்ந்து மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் பதவி விலகல்
மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சுபறாஜினி ஜெகநாதனுக்கு எதிராக மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தால் நீதிச்சேவை ஆணைக்குழுவில் வழங்கப்பட்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 23.09.2025 அன்று நீதிச்சேவை ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசாரணையின் பின்னர் குறித்த நீதிவான் அவர்கள் நீதிவான் ஒருவருக்குரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தவில்லை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவானுக்கு எதிராக நீதிச்சேவை ஆணைக்குழுவில் மல்லாகம் சட்டத்தரணிகளால் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணைகள் நீதிச்சேவை ஆணைக்குழுவில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிலையில், குறித்த நீதிவான் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார். அவரின் பதவி விலகல் நீதிச்சேவை ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, மேல்நீதிமன்ற நீதிபதியொருவர் மல்லாகம் நீதிமன்றத்துக்கு நேற்றுக்காலை சென்று, பதவி விலகிய நீதிபதியின் சமாதான அறை மற்றும் அதிலுள்ள பொருள்களைப் பொறுப்பேற்று நீதிமன்றப்பதிவாளரிடம் கையளித்தார்.