சினிமா
நிரந்தரமாக பிரியும் ஜி.வி பிரகாஷ் – சைந்தவி.! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
நிரந்தரமாக பிரியும் ஜி.வி பிரகாஷ் – சைந்தவி.! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் திகழ்பவர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் பள்ளித் தோழியும் பாடகியுமான சைந்தவியை 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். கிட்டத்தட்ட 12 வருடங்களாக ஒன்றாக பயணித்த இருவரும், கடந்த மாதம் ஒரே காரில் சென்னை குடும்ப நல கோர்ட்டிற்கு வந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். இது ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில், இவர்களுடைய வழக்கு விசாரணை இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஜி.வி பிரகாஷும் சைந்தவியும் நேரில் ஆஜர் ஆகினர். குறித்த வழக்கு விசாரணையின் போது குழந்தையை சைந்தவி கவனித்துக் கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார் .இதை அடுத்து இவர்களுடைய வழக்கு அடுத்த மாதம் 30 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஒத்தி வைத்துள்ளார் .