சினிமா

பாடம் கற்பிக்க என் பெற்றோர் அப்படி செய்தார்களா? வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன்..

Published

on

பாடம் கற்பிக்க என் பெற்றோர் அப்படி செய்தார்களா? வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன்..

பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி பிரியதர்ஷன், ஹலோ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின், தமிழில் ஹீரோ, மாநாடு என்ற இரு படங்களில் மட்டுமே நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.தற்போது தமிழில் ஜெனி, மார்ஷல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் மலையாள சினிமாவில் துல்கர் சல்மான் தயாரித்த லோகா சாப்டர் 1 சந்திரா படம் ரிலீஸாகி 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை பெற்று வருகிறது.இந்நிலையில், வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணரவைக்க, தன்னையும் தன் சகோதரனையும் ஒரு வாரம் வியட்நாமில் உள்ள அனாதை இல்லத்தில் விட்டு சென்றுவிட்டதாக தான் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் பரவி வருவதை கடுமையாக கண்டித்திருக்கிறார்.தான் இதுபோன்ற விஷயங்களை ஒருபோதும் கூறியதில்லை. அது நடக்கவும் இல்லை, இனி இதுபோன்ற கருத்துக்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version