இலங்கை
பாதசாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள் ; ஒருவர் பலி
பாதசாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள் ; ஒருவர் பலி
கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலவிய பகுதியில் பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பாதசாரி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (24) இரவு பதிவானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் பாதசாரி இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர்.
பாதசாரி கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.