பொழுதுபோக்கு
பாலியல் தொழிலாளி கேரக்டர்; நடிகருடன் உண்மையாக நெருக்கம் காட்டிய தமிழ் நடிகரின் மகள்? 1997-ல் நடந்த சம்பவம்
பாலியல் தொழிலாளி கேரக்டர்; நடிகருடன் உண்மையாக நெருக்கம் காட்டிய தமிழ் நடிகரின் மகள்? 1997-ல் நடந்த சம்பவம்
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகைகள் பலரும் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது துணிச்சலான கேரக்டரில் நடித்து அசத்தி இருப்பார்கள். அந்த படங்கள் வெற்றியடைந்தாலும், தோல்வியை சந்தித்திருந்தாலும், அவர்கள் நடித்த அந்த கேரக்டர் காலம் கடந்தும் நிலைத்திருக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில் ஒரு நடிகை பாலியல் தொழிலாளியாக நடித்து இன்றுவரை பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.அந்த நடிகை வேறு யாரும் இல்லை. இந்தி சினிமாவின் முன்னணி நடிகையான ரேகா தான். தமிழ் சினிமாவில் காதல் மன்னன் என்ற அடையாளத்துடன் வலம் வந்த ஜெமினி கணேசனின் மகளான இவர், 90-களில், பல சர்ச்சைக்குரிய படங்களில் நடித்து, தனது தைரியமான கேரக்டர் மற்றும் நடிப்புக்காக இன்றுவரை பேசப்படடு வரும் இவர், ஒரு படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.1997 ஆம் ஆண்டு, வெளியான ‘ஆஸ்தா: இன் தி ப்ரிசன் ஆஃப் ஸ்பிரிங்’ (Aastha: In the Prison of Spring) என்ற படத்தில் தான் ரேகா பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். பாசு பட்டாச்சார்யா இயக்கத்தில் உருவான இந்த படத்தில், ஓம் புரி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ரேகா, ஆடம்பரமான ஆடைகள் மற்றும் காலணிகளை வாங்குவதற்காக இரகசியமாக பாலியல் தொழிலாளியாக மாறும் ஒரு அதீத ஆசை கொண்ட இல்லத்தரசியான மான்சி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் வெளியான பிறகு, ரேகா மற்றும் ஓம் புரி இடையேயான கெமிஸ்ட்ரி அனைவராலும் பேசப்பட்டது. 3 மணி நேரம் 30 நிமிடங்கள் நீளமான இந்த வயது வந்தோருக்கான படம், இந்திய கலை சினிமாவுக்கும் வணிக சினிமாவுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்ததாகக் கூறப்பட்டு பெரிய விவாதமாக மாறியது. இப்படத்தில் ரேகா மற்றும் ஓம் புரி ஆகியோருக்கு இடையே ஒரு நாற்காலியில் நெருக்கமாக இருப்பது போல் ஒரு தைரியமான காட்சி இருந்தது.இது குறித்து அப்போது பேசப்பட்ட ஒரு தகவலின்படி, இந்தக் காட்சியை நிஜமாக காட்ட ஓம் புரி மற்றும் ரேகா தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ததாகவும், மேலும், இரண்டு நட்சத்திரங்களும் காட்சியில் மிகவும் ஈடுபட்டு, ‘கட்டுப்பாட்டை இழந்தனர்’ என்றும், அவர்களது பாரம் தாங்காமல் நாற்காலி உடையும் நிலை ஏற்பட்டது என்றும் கூறப்பட்டது. ஆனால் இது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. இப்படம் வெளியான பிறகு ரேகா கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டார். திருமணமாகி பாலியல் தொழிலாளியாக மாறும் அவரது கேரக்டர் குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.உண்மையில், ஒரு பேட்டியில் இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்திருந்த ரேகா, எந்தப கேரக்டரில் நடிப்பதிலும் எனக்குப் பிரச்சினைகள் இல்லை. என்னிடம் வரும் எந்தவொரு கேரக்டருக்கும் என்னால் நியாயம் செய்யக்கூடிய ஒரு நிலையை நான் அடைந்துவிட்டேன். அது ஒரு தாயின் கேரக்டரோ, ஒரு அண்ணியின் கேரக்டரோ, எதிர்மறையான, நேர்மறையான, பரபரப்பான அல்லது வேறு எதுவாகவோ இருக்கலாம்,” என்று அவர் கூறியதாக தகவல் வெளியானது.மற்றொரு பேட்டியில், இந்தத் திரைப்படம் ஒரு மென்மையான பாலியல் படத்திற்கு குறைவானது அல்ல என்றும் ரேகா ஒப்புக்கொண்டார். மேலும், “நிஜ வாழ்க்கையில் இது போன்ற விஷயங்கள் நடக்கவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்களா? ஒரு நடிகையாக எனது வேலை அனைத்தையும் நம்பும்படி நடிப்பதுதான்,” என்றும் அவர் கூறியிருந்தார்.