இலங்கை
பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது
பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது
பண்டாரகம வேவிட்ட குளத்தில் சட்டவிரோதமாக கற்களை நிரப்பியதாக சந்தேகத்தின் பேரில் பண்டாரகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சுமார் 8 மீட்டர் அகலமும் 20 மீட்டர் நீளமும் கொண்ட குளத்தின் ஒரு பகுதியில் ஏபிசி கற்கள் நிரப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நிரப்புதல் தொடர்பாக வேளாண் ஆராய்ச்சி அதிகாரி பண்டாரகம பொலிஸில் செய்த புகாரைத் தொடர்ந்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.