சினிமா

பொன்னியின் செல்வன் பாடல்; ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி ரூபா செலுத்த உத்தரவு!

Published

on

பொன்னியின் செல்வன் பாடல்; ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி ரூபா செலுத்த உத்தரவு!

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் விக்ரம், ரவி மோகன், கார்த்தி, திரிஷா, ஐஷ்வர்யா ராய் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். 

இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தார். இந்நிலையில், இத் திரைப்படத்தில் உள்ள ‘வீர ராஜ வீர’ என்ற பாடல், பாடகரான ஃபையாஸ் வசிஃபுதின் தாஹர் என்பவரின் தந்தை ஃபையாசுதின் தாஹர் மற்றும் மாமா ஸாஹிருதின் தாஹர் இசையமைத்த சிவதுதி பாடலில் இருந்து இசையமைப்பட்டுள்ளதாக தெரிவித்து, குறித்த பாடல் மீது காப்புரிமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

Advertisement

இந்த வழக்க விசாரணையின் போது ஏ.ஆர். ரஹ்மானுக்கு ரூ. 2 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும், அனைத்து சமூக ஊடகங்களிலும் குறித்த பாடலுக்கான தனியுரிமையை தாஹர் சகோதரர்களின் பெயர்களில் கொடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், குறித்த உத்தரவுக்கு எதிராக ஏ.ஆர். ரஹ்மான் மேன்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தார். 

குறித்த வழக்கை விசாரணை செய்த இரண்டு நீதிபதிகள் கொண்ட டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு சென்னை நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும் இரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version