இலங்கை
மெஜிக்போலை விழுங்கிய 3 வயதுக் குழந்தை!!
மெஜிக்போலை விழுங்கிய 3 வயதுக் குழந்தை!!
மெஜிக்போல் எனும் விளையாட்டுப்பொருளை வாயில் வைத்து விழுங்கிய 3 வயதுடைய குழந்தையொன்று சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட மெஜிக்போல் சிறிய பருப்பு அளவிலுள்ள பிளாஸ்ரிக் பொருளாகும். அது தண்ணீரில் ஊறியதும் பெரிய உருவமாக மாறும் தன்மை கொண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான பொருள்களை சிறுவர்கள் உள்ள இடங்களில் வைப்பதைத் தவிர்க்கவேண்டும் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.