இலங்கை
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி ; காப்பீட்டுத் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி ; காப்பீட்டுத் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1,669 மில்லியன் ரூபாய் நிதி செலுத்தப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நெல், சோளம், மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு பயிர்செய்கைகளுக்காக 81,234 விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் கால்நடை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பல கால்நடைகள் மற்றும் ஆடு காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபைதெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபையின் நிதி சொத்துக்கள் 2,491 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.