உலகம்

வெனிசுவெலாவில் பாரிய நிலநடுக்கம்!

Published

on

வெனிசுவெலாவில் பாரிய நிலநடுக்கம்!

வெனிசுவெலாவின் வடமேற்கே ஜூலியா மாகாணத்தில் மெனி கிராண்ட் என்ற இடத்தில், தலைநகர் காரகாஸ் நகரில் இருந்து 600கிலோமீற்றர் மேற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிச்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 7.8கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும், அண்டை நாடான கொலம்பியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

Advertisement

இதனால், எல்லை பகுதியருகே அமைந்த வீடுகள், அலுவலக கட்டிடங்களில் இருந்து பலர் தப்பி வெளியே ஓடினர். எனினும், இரு நாடுகளிலும் உயிரிழப்பு பற்றி எந்தவித தகவலும் வெளிவரவில்லை. ஆனால், அரசு தொலைக்காட்சியில் வெனிசுவெலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அறிவியல் சார்ந்த நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தினார். நிலநடுக்கத்தின்போதும், அதற்கு பின்னரும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடையூறு எதுவும் ஏற்படவில்லை. இதன்பின்பு, ஜூலியா மாகாணத்தில் 3.9 மற்றும் பரினாஸ் மாகாணத்தில் 5.4 என்ற அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version