வணிகம்
H-1B விசா தள்ளுபடி: அமெரிக்காவில் வேலை இழந்த இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்
H-1B விசா தள்ளுபடி: அமெரிக்காவில் வேலை இழந்த இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்
அமெரிக்காவில் வேலை கனவுடன் லட்சக்கணக்கான இந்தியர்கள் காத்திருக்க, அவர்களுக்குப் புதிய சவால் ஒன்று எழுந்தது. புதிதாக H-1B விசாவுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு, அமெரிக்க நிறுவனங்கள் $100,000 (சுமார் ₹83 லட்சம்) கட்டணமாகச் செலுத்த வேண்டும் என புதிய விதிமுறை அமலுக்கு வந்தது. இந்த மிகப்பெரிய தொகையால், வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்கள் தயங்கும் என அச்சம் ஏற்பட்டது. ஆனால், இந்த புதிய விதி, எதிர்பாராதவிதமாக, ஏற்கெனவே அமெரிக்காவில் இருக்கும் ஆயிரக்கணக்கான H-1B ஊழியர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்குப் புதிய பொற்காலம்!2025-ஆம் ஆண்டில், சுமார் 1.45 லட்சம் H-1B விசா வைத்திருப்பவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள், அமெரிக்க அரசின் 60 நாள் சலுகை காலத்துக்குள் (Grace Period) புதிய வேலையைக் கண்டுபிடிக்க வேண்டும். இல்லையெனில், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகினர். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.புதிய H-1B விசாவுக்கு $100,000 கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால், அமெரிக்க நிறுவனங்கள், ஏற்கெனவே அமெரிக்காவில் இருக்கும் H-1B ஊழியர்களைப் பணியமர்த்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், அவர்களுக்குப் புதிய வேலை வழங்குவதற்கு அந்த மிகப்பெரிய கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை. வெறும் ஒரு விண்ணப்ப மாற்றக் கட்டணத்தைச் செலுத்தினாலே போதுமானது.எதிர்பாராத வரப்பிரசாதம்!இது குறித்து பேசிய குடியேற்ற நிபுணரான டிமிட்ரி லிட்வினோவ், “புதிய விதிமுறை, அமெரிக்காவில் உள்ள H-1B விசா வைத்திருப்பவர்களை நிறுவனங்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானவர்களாக மாற்றியுள்ளது. ஏனெனில், வெளிநாட்டிலிருந்து ஒருவரை அழைத்து வர $100,000 கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இவர்களைப் பணியில் அமர்த்த இந்தத் தொகையைச் செலுத்தத் தேவையில்லை. இது அவர்களுக்கு ஒரு ‘தயார் நிலையில் உள்ள’ திறமைசாலிகளின் குழுவாகக் கருதப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.ஆகவே, இதுவரை வேலை இழந்ததற்கான கவலையில் இருந்த H-1B ஊழியர்களுக்கு, இந்த புதிய விசா கட்டண உயர்வு ஒ ரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இது அவர்களுக்கு மீண்டும் ஒரு புதிய வேலையைப் பெறவும், அமெரிக்காவில் தங்கள் வாழ்க்கையைத் தொடரவும் ஒரு புதிய வழியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, இந்த ஒரு சின்ன மாற்றம், அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்களின் எதிர்காலத்தை முற்றிலும் மாற்றி அமைக்கக்கூடும்!இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.