பொழுதுபோக்கு

எடிட்டருக்கு எதுக்குடா சிக்பேக்ஸ்? பிரபலத்தை கலாய்த் ‘கிஸ்’ பட இயக்குனர்: இளமை ரகசியம் இதுதான்!

Published

on

எடிட்டருக்கு எதுக்குடா சிக்பேக்ஸ்? பிரபலத்தை கலாய்த் ‘கிஸ்’ பட இயக்குனர்: இளமை ரகசியம் இதுதான்!

டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம கிஸ். ப்ரீத்தி அஸ்ராணி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில், விடிவி கணேஷ், ரியோ ரமேஷ், தேவயானி, ஆகியோருடன், விஜய் சேதுபதி கதையை எடுத்து சொல்பவராக வருகிறார். பிரபு இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஜென் மார்ட்டின் என்பவர் இசையமைத்துள்ள இந்த படம் கடந்த செப்ம்பர் 19-ந் தேதி வெளியானது.வாழ்க்கையில் ஒரு மனிதனின் முதல் முத்தம் தொடர்பாக இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக, கவின், இயக்குனர் சதீஷ் உள்ளிட்டோர் ரெட்நூல் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். இதில் 40வயதை கடந்த பின்னரும் இன்றும் இளமையாக இருக்க என்ன காணம் என்பது குறித்து சதீஷ் பேசியுள்ளார்.2007-ம் ஆண் வினய் நடிப்பில் வெளியான உன்னாலே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சதீஷ், அதன்பிறகு, வாரணம் ஆயிரம், என்னென்றும், பீஸ்ட், பிரின்ஸ், சொப்பன சுந்தரி, பிரதர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார், இவர் பீஸ்ட் படத்தில் வி.டி.வி கணேஷூடன் இணைந்து செய்த காமெடிகள் இன்றும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல், தலைவா படம் தொடங்கி, டார்லிங், வாலு, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.தற்போது கவின் நடிப்பில் வெளியாகியுள்ள கிஸ் படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ள சதீஷ், தனது இளமைக்கு முக்கிய காரணம், நடனம் தான் என்று கூறியுள்ளார். மேலும், நண்பர்களுடன் ஜாலியாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணம். விஜய் சார் போல் பல இருக்கிறார்கள். டான்ஸ் இருந்தால் கண்டிப்பாக இளமை இருந்துகொண்டே இருக்கும் என்று சதீஷ் கூறியுள்ளார். கிஸ் படம் ரொம்ப ஜாலியான படம், ஸ்பாட்டில் அனைவரும் ஜாலியாக இருந்தால் தான் படமும் ஜாலியாக இருக்கும்.படத்தின் இறுதிக்கட்ட பணிகளின் போது எடிட்டர் ப்ரனவ், கவின், நான் உட்பட யாருமே தூங்கவில்லை. அப்போது லிப்டில் வந்துகொண்டிருக்கும்போது எடிட்டர் ப்ரனவ் என் மஸல்சே போச்சு மச்சான் என்று சொன்னார். இவனை முதன் முதலில் ஜிம்மில் தான் பார்த்தேன். மாடலிங் செய்வான் என்று பார்த்தால், இவன் எடிட்டர். எடிட்டருக்கு எதுக்குடா சிக்ஸ் பேக்ஸ் என்று ஜாலியாக பேசியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version