பொழுதுபோக்கு
ஒரே நேரத்தில் 7 படம்… தனுஷ், நயன்தாரா படங்கள் குறித்து அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!
ஒரே நேரத்தில் 7 படம்… தனுஷ், நயன்தாரா படங்கள் குறித்து அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இட்லி கடை’. இப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.’இட்லி கடை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. ‘யு’ சான்றிதழ் பெற்ற ‘இட்லிகடை’ திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் தனுஷ், இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மமிதா பைஜு இணைந்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிருத்வி பாண்டியராஜன் உள்பட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் த்ரில்லராக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தொடர்ந்து, நடிகை நயன்தாரா ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தை நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நிலையில் தற்போது அவர் சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ திரைப்படத்தை இயக்குவதில் பிசியாக இருக்கிறார்.இதனால், இயக்குநர் சுந்தர் .சி ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கிறார்.Ishari Ganesh Recent- Work is going on for 7 films in my production.- Recently, we finished the first schedule of #VigneshRaja & #Dhanush’s film.- #MookuthiAmman2 is almost complete.- #VJSiddhu’s #Dayangaram shoot will begin next month.#D52pic.twitter.com/Jym2rL10OLஇந்நிலையில், தனுஷ், நயன்தாரா நடிக்கும் படங்கள் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அப்டேட் கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது, “ஏழு படங்களில் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. நயன்தாரா நடிக்கும் ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. விஜே சித்துவின் படம் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கிறது” என்றார். இந்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.