இலங்கை
கட்டுநாயக்கவில் கைதானவரிடம் விசாரணை;
கட்டுநாயக்கவில் கைதானவரிடம் விசாரணை;
கோண்டாவில் பகுதியிலிருந்து கைக்குண்டு, வாள்கள் மீட்பு!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர், கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், கோண்டாவில் பகுதியில் இருந்து கைக்குண்டும். இருவாள்களும் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுகள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்ல முற்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் கைதானார். அவர் யாழ்ப்பாணம் பெருங்குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார். கைக்குண்டு ஒன்றையும், இரு வாள்களையும் மீட்டனர்.
சந்தேகநபர் நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். இதன்போது, அவரை இரண்டு நாள்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு பொலிஸார் அனுமதி கோரிய நிலையில், நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.