இலங்கை
கதைகூறல் போட்டிக்கு விண்ணப்பங்கோரல்
கதைகூறல் போட்டிக்கு விண்ணப்பங்கோரல்
10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான கதைகூறல் போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்ட தேசிய கலை இலக்கியப் பேரவை மற்றும் காலையடி மறுமலர்ச்சி மன்ற நூலகம் இணைந்து இந்தப் போட்டியை நடத்தவுள்ளன.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 12ஆம் திகதி காலை 9 மணிக்கு காலையடி, பண்டத்தரிப்பில் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 12 அமைந்துள்ள மறுமலர்ச்சி மன்றத்தில் போட்டி இடம்பெறும். போட்டியில் பங்குபற்றுபவர்கள் முழுப்பெயர்,முகவரி,தொலைபேசி இலக்கம், பிறந்த திகதி, கற்கும் தரம், கல்விகற்கும் பாடசாலை, பங்குபற்றும் போட்டி ஆகிய விவரங்களை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 3 ஆம் திகதிக்கு முன்னதாக நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அனுப்பமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.