சினிமா

குடிகார அப்பா..சிறுவயதில் தவிக்கவிட்ட குடும்பம்!! சீரியல் நடிகையின் மறுப்பக்கம்..

Published

on

குடிகார அப்பா..சிறுவயதில் தவிக்கவிட்ட குடும்பம்!! சீரியல் நடிகையின் மறுப்பக்கம்..

சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகைககளில் ஒருவர் தான் நடிகை சாந்தினி. ஆந்திராவில் பிறந்த சாந்தினியின் குடும்பம் கலைக்குடும்பமாக திகழ்ந்து வருகிறது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.மேலும், ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார். தற்போது, சாந்தினியின் மறுப்பக்கம் குறித்த தகவல் இணையத்தில் பகிரப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.சாந்தினியின் அம்மா, சித்தி என அனைவருமே டூப் நடிகர்களாக இருந்துள்ளனர். அம்மாவின் அரவணைப்பில் இருந்து வந்த சாந்தினி திடீரென குடும்ப சூழல் காரணமாக கிறிஸ்துவ விடுதியில் சேர்க்கப்பட்டார்.அதற்கு காரணம், சந்தினியின் அப்பாவிற்கு இருந்த குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் அம்மா, அப்பாவிற்கு மனகசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர். அம்மாவின் அரவணைப்பில் இருக்க வேண்டிய வயதில், தனியாக ஹாஸ்டலில் வளர்ந்துள்ளார். தாயை பிரிந்ததில் ஏற்பட்ட மன அழுத்தத்தால் துவண்டுப்போன சாந்தினி ஆறுதலுக்காக பைபிள் படிக்க ஆரம்பித்திருக்கிறார்.12 ஆம் வகுப்பு வரை படித்த சாந்தினிக்கு, சினிமாவில் நடனக்கலைஞராக வேண்டும் என்ற ஆசையில் நடனம் கற்றுக்கொண்டார். அப்போதுதான் விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து, முதல் இரண்டு சுற்றிலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.அதன்பின் மீண்டும் ஒயில்கார்ட் ரவுண்ட்டில் வந்த சாந்தினி இறுதி போட்டி வரை சென்றார். அதன்பின் சின்ன சின்ன ரோலில் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது பல சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து தனக்கென ஒரு இடத்தினை பிடித்தார்.வில்லி, ஹீரோயின் என கலக்கி வரும் சாந்தினி, விருதுவிழா ஒன்றில், இது எல்லாம் மூஞ்சா..நீ நடிச்சு எங்கே ஜெயிக்க போற, இது எல்லாம் தேவையில்லாத வேலை என் அம்மாவே சொன்னாங்க, ஆனா, மக்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள் என்று கண்கலங்கியபடி பேசியிருக்கிறார் நடிகை சாந்தினி.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version